Homeஅரசியல்திமுக கிளை செயலாளர்களுக்கு பிச்சாண்டி எச்சரிக்கை

திமுக கிளை செயலாளர்களுக்கு பிச்சாண்டி எச்சரிக்கை

திமுக கிளை செயலாளர்கள் செயல்படாமல் இருந்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என பிச்சாண்டி எச்சரிக்கை விடுத்தார்.

செயல்வீரர்கள் கூட்டம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெறையூரில் திருவண்ணாமலை கிழக்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது.

பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்ணன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஒன்றிய துணை செயலாளர்கள் வசந்தி விஜயகுமார், தண்டரை பா.பாபு, ஒன்றிய பொருளாளர் ஆர்.பெருமாள், மாவட்ட பிரதிநிதிகள் பி.பழனி, சீ.சந்திரசேகரன், ஆர்.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சி.மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார்.

திமுக கிளை செயலாளர்களுக்கு பிச்சாண்டி எச்சரிக்கை

சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது,

அமைச்சர் எ.வ.வேலு, தண்டராம்பட்டு தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது அதிக வாக்குகளை தண்டராம்பட்டை விட பெற்றுத் தந்தது திருவண்ணாமலை ஒன்றியம்தான். அதிமுக ஆளும்கட்சியாக இருந்த போதும் இந்த ஒன்றியம் திமுக கோட்டையாக இருந்தது.

மக்களிடம் பழக வேண்டும்

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் உள்ள 20 ஊராட்சிகள் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வருகின்றன. இதனால் இங்கு அரசு திட்டங்களைத்தான் செயல்படுத்த முடிகிறது. மேலும் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த தனி கவனம் செலுத்தப்படும்.

திமுக கிளை செயலாளர்கள் மக்களோடு மக்களாக பழகி அவர்களது ஆதரவை பெற வேண்டும். நான் சொன்னால் ஒட்டு போட்டு விடுவார்கள் என சொல்ல கூடாது. சில கிளை செயலாளர்கள் ஊராட்சி தலைவர் தேர்தலில் ஜெயிக்கவில்லை. வேறு ஒருவர் ஜெயிக்கிறார். தலைவர் ஆகிறார். அப்போது நாங்கள் என்ன செய்ய முடியும்?

மக்களிடம் சொல்ல வேண்டும்

திமுக என்ன செய்து விட்டது என பேசுபவர்களுடன் சேர்ந்து கொண்டு நாமும் பேசக் கூடாது. திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பகுதி சாலை கூட நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. சுறுசுறுப்பான முதல்வரை பெற்றிருக்கிறோம். ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

திமுக கிளை செயலாளர்களுக்கு பிச்சாண்டி எச்சரிக்கைசேல்ஸ்மேன், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாற்று கட்சியில் இருக்கும் மகன், மாமன், மச்சானுக்கு வேலை கேட்டு வருவது இருக்கக் கூடாது. திமுக ஆளும் கட்சியானவுடன் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கின்றனர்.

திமுக எதிர்கட்சியாக 10 வருடங்கள் இருந்த போது நம்முடன் இணைந்து பணியாற்றியவர்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும். இதனால்தான் அதிமுக ஆட்சியில் திமுகவில் ஒன்றிய செயலாளர்களாக இருந்தவர்களே மீண்டும் ஒன்றிய செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

தலைமை கழகம் உத்தரவு

சில கிளை செயலாளர்கள், தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளில் கூட ஊரில் படம் வைத்து பூ போடுவதில்லை. கொடுத்த மினிட் புக்கையும் பரண் மீது வைத்து விடுகிறீர்கள். செயல்படாத கிளை செயலாளர்களை பதவியிலிருந்து நீக்க தலைமை கழகம் சொல்லியிருக்கிறது. எனவே செயல்படாதவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

கோயில் அறங்காவலர் பணியிடங்களுக்கு இன்னும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தராமல் உள்ளீர்கள். ஆதிதிராவிடர் பகுதியில் கோயில் கட்ட ரூ.2லட்சம் அரசு நிதி வழங்குகிறது. அதற்கும் முயற்சிக்காமல் உள்ளீர்கள். கூட்டுறவு தேர்தல், பாராளுமன்ற தேர்தல்கள் வர உள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து சிறப்பாக பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, இளைஞரணியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, பூத் கமிட்டி அமைப்பது போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் ஞானசௌந்தரி, மாரிமுத்து, ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இரா.செல்வராஜ், மதுராம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அ.வில்சன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வசந்தாபழனி, சிவசாமி கணேசன், கமலா ராமகிருஷ்ணன், ஆர்.ஜீவா, பெ.மஞ்சுநாதன் மற்றும் கிளைக்கழக செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் ஒன்றிய துணை செயலாளர் கே.எம்.பழனி நன்றி கூறினார்.

திருவண்ணாமலை

இதே போல் திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற திருவண்ணாமலை நகர திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.

திமுக கிளை செயலாளர்களுக்கு பிச்சாண்டி எச்சரிக்கைஇதில் டிசம்பர் 19ந் தேதி பேராசிரியர் அன்பழகனின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை திருவண்ணாமலை நகரில் ஒவ்வொரு வார்டிலும் அவரது திருவுருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என்றும், வாக்குச்சாவடி பணிக்குழு உறுப்பினர்கள் பட்டியலை நிர்வாகிகள் விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!