Homeஆன்மீகம்பருவதமலைக்கு வாகனத்தில் செல்லும் வகையில் பாதை

பருவதமலைக்கு வாகனத்தில் செல்லும் வகையில் பாதை

பருவதமலைக்கு ஓரளவு தூரம் வரை வாகனத்தில் செல்லும் வகையில் பாதை அமைத்திட எம்.எல்.ஏவுடன் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த தென்மகாதேவ மங்கலத்தில் 4560 அடி உயரத்தில் பருவதமலை அமைந்திருக்கிறது. இந்த மலை உச்சியில் மல்லிகார்ஜூனர் மற்றும் பிரம்மராம்பிகை கோயில் உள்ளது.

பருவதமலைக்கு வாகனத்தில் செல்லும் வகையில் பாதை

திருவண்ணாமலையில் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்வது போல் பருவதமலையில் ஏராளமான பக்தர்கள் 4560 அடி உயரம் ஏறி சாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. பர்வதமலையில் மலையேற ஓரளவுக்கு மட்டுமே பாதை வசதி உள்ளது.

மலையின் மேல்நோக்கி செல்லும் பாதை செங்குத்தாக காணப்படும். குமரி நெட்டு, கடப்பாறை நெட்டு பகுதிகளில் கம்பிகளையும், கடப்பாறைகளையும் பிடித்து மேலே ஏறிச் செல்ல வேண்டும்.

பருதமலைக்கு பவுர்ணமி, கிருத்திகை, மகாதீபம் மற்றும் மாத பிறப்பு போன்ற முக்கிய தினங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

பருவதமலைக்கு வாகனத்தில் செல்லும் வகையில் பாதை

எனவே பருவதமலை உச்சிக்கு செல்லும் வகையில் ரோப் கார் வசதி செய்து தர வேண்டும் என சட்டமன்றத்தில் பேசும் போது கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பெ.சு.தி.சரவணன் கோரிக்கை விடுத்திருந்தார். ரோப் கார் வசதிக்கு பதில் ஓரளவு தூரம் வரை காரில் செல்லும் வகையிலும், பக்தர்கள் சிரமமின்றி செல்லவும் புதிய பாதை அமைத்து தர அரசு ஒப்புதல் அளித்தது.

See also  வெயில் கொடுமை-சுருண்டு விழுந்து இறந்த பக்தர்

இதே போல் 1500 அடி உயரத்தில் உள்ள போளூர் சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு வாகனத்தில் செல்லும் வகையில் பாதை அமைத்து தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய பாதை அமைக்கும் பணிக்காக பர்வதமலை பாதையில் நேற்று கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பெ.சு.தி.சரவணனுடன் சென்று இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் நில அளவையர்கள் அடங்கிய குழு ஆய்வை மேற்கொண்டது.

பருவதமலைக்கு வாகனத்தில் செல்லும் வகையில் பாதை

அப்போது அவர்களிடம் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, பக்தர்கள் செல்லும் நடைபாதையை தவிர்த்து மற்றொரு மாற்று பாதை அமைப்பதற்கு உண்டான பணிகளை செய்யுங்கள், பருவதமலை செல்லும் வழியில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து பச்சையம்மன் கோயில் வரை சாலையை அகலப்படுத்த வேண்டும், அதே போல் முள்வேலிகள் அதிகமாக உள்ள பச்சையம்மன் கோயில் முதல் வீரபத்திரன் கோயில் வரை சாலையை சீரமைக்க வேண்டும், பக்தர்கள் எண்ணற்ற அளவு வருவதை மனதில் கொண்டு கோயில் அடிவாரத்தில் இருந்து மலையேறுவதற்கு பாதை வசதியை விரைவில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

See also  ஸ்டாலினுக்கு V.H.Pயின் பூஜாரிகள் அமைப்பு பாராட்டு

சட்டமன்ற உறுப்பினருடன் யூனியன் சேர்மன் அன்பரசி ராஜசேகரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அ.சிவக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் க.சுப்பிரமணியம், மற்றும் பஞ்சாயத் தலைவர் கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராமன் உள்பட பலர் சென்றிருந்தனர்.


தொடர்புடைய செய்தி…

தென்கைலாயம் எனப்படும் பருவதமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!