Homeசெய்திகள்இந்நிலை என்றுதான் மாறுமோ அண்ணாமலையாரே- பக்தர்கள் குமுறல்

இந்நிலை என்றுதான் மாறுமோ அண்ணாமலையாரே- பக்தர்கள் குமுறல்

சாதாரண மக்களுக்கு பரணி தீபம், மகாதீப தரிசனம் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இந்நிலை என்றுதான் மாறுமோ அண்ணாமலையாரே என சமூக வலை தளங்களில் பக்தர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இனி வரும் விழாவில் இந்த மாதிரி நடக்காமல் இருக்க அருள் புரிவாய் சிவனே…..என்ற தலைப்பில் அந்த பக்தர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு இதுதான்…

இந்நிலை என்றுதான் மாறுமோ அண்ணாமலையாரே- பக்தர்கள் குமுறல்
அம்மணி அம்மன் கோபுரம் முன்பு

சார் பரணி தீபம் பார்க்க கோவில் உள்ள போகணும் சார்
அனுமதி இல்லை தம்பி.
சார் அதோ அவங்க போறாங்கலே..
அவங்க உயர் அதிகாரி தம்பி.
சார் அவங்க கூட போறவங்க..?
அது அவங்க குடும்பத்தார் தம்பி
அவுங்க மட்டும் போலாமா..?
போகலாம் தம்பி..
சார் இதோ போறவங்க இவங்க..?
அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் தம்பி
அடுத்தடுத்து ஒரு சிவனடியார்
ஐயா சாமி பாக்கணும் விடுவீங்களா
அனுமதி இல்லை ஐயா..
அடுத்தது பெரிய பெரிய ஆசிரம நிர்வாகிகள்
சார் சாமி பார்க்க போகணும்
கார்டு இருக்கா
இருக்குங்க சார்
நீங்க தாராளமாக கோவில் உள்ள போகலாம்
அடுத்தது பொதுமக்கள்
சாமி பாக்கணும் சார்
எல்லாரும் வெளியே போங்க உங்களுக்கு அனுமதி இல்லை

See also  திருவண்ணாமலையில் மருந்து கடையை மூடிய அதிகாரிகள்

ஆக மொத்தத்தில் இந்த தீபத்திருவிழா யாருக்கானது என்பதே அனைத்து தரப்பு மக்களின் கேள்வியாக உள்ளது..?

தரிசனம் என்பது எட்டாக்கனி

கடந்த பல வருடங்களாகவே உள்ளூர் மக்களுக்கு பரணி தீபம், மகாதீப தரிசனம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது ஆனால் எங்கோ இருந்து வரும் பல அதிகாரிகளும் அவர்களது குடும்பங்களும் பெரிய செல்வந்தர்களும் எளிதாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்..இந்நிலை என்றுதான் மாறுமோ அண்ணாமலையாரே உனக்கு தான் வெளிச்சம்

(காவல் துறையினர் பல கஷ்டங்களுக்கு மத்தியில் 24 மணி நேரமும் பணியாற்றுகிறார்கள். இது மறுப்பதற்கு இல்லை. ஆனால் அவர்கள் பரணி தீப,மகாதீப தரிசனத்தை மிக எளிதில் தரிசனம் செய்து விடுகிறார்கள் )

24 மணி நேரமும் குப்பைகளுக்கும் மூத்திர நாத்தத்திற்கும் மத்தியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் இவர்கள் இல்லை என்றால் ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவே இல்லை. இவர்களின் பணி மிகப் பெரியது.

இவர்களில் சிலரையாவது பரணி தீபமோ, மகா தீபமோ, பார்க்க அனுமதிக்கலாமே?
ஆக மொத்தத்தில் உள்ளூர்காரர்களுக்கு கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தீபத் திருவிழாவில் மிகவும் மனவருத்தம் மட்டும் தான் மிச்சம்.

See also  பெரிய தேர் அருகே ஹை வோல்டேஜ் டிரான்ஸ்பார்மர்

இப்படி முடிகிறது அந்த பதிவு

உள்ளுர் மக்களை அவமானபடுத்தி அசிங்கப்படுத்தி வீடுகளுக்கு நடந்து செல்ல கூட அனுமதிக்காத வெளியூர் போலீஸின் செயல் வருந்ததக்கது. கண்டிக்கத்தக்கது. தீபத்திருவிழா அதிகாரிகளுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் மட்டுமே நடத்தப்படுவது சில வருடங்களாக வாடிக்கையாகி விட்டது.

ஏமாற்றமே மிஞ்சியது

ஆட்சி மாறிய உடன் காட்சி மாறும் என நம்பிய சாமான்யர்களுக்கு மாற்றம் வரவில்லை. ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. உள்ளுர் மக்களுக்கு பாஸ் கொடுத்து ஏமாற்றி வெளியே நிறுத்திய செயல், கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறி விடக் கூடாது என்ற கலைஞரின் வசனமே நினைவிற்கு வருகிறது.

இது இன்னொரு பக்தரின் குமுறலாக உள்ளது.

இந்நிலையில் பரணி தீபத்தின் போது கோயிலுக்குள் தரிசனத்திற்கு தடை செய்யப்பட்ட போது பெண் ஒருவர், மக்களுடைய பணம்தான் கோயிலுக்கே வருமானம். நாங்கள் வரி கட்டுகிறோம். கோயிலுக்குள் செல்வதற்கு எங்களுக்கு உரிமை இல்லையா? என பேசும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதே போல் இளைஞர் ஒருவர் ரூ.2 ஆயிரத்திற்கு பாஸ் வாங்கியதாக கூறும் வீடியோவும் பரவி வருகிறது.

See also  அன்றே போலீசுக்கு அறிவுரை வழங்கிய அமைச்சர் வேலு

வீடியோவை பார்க்க…

https://www.facebook.com/100010512168519/videos/721246509053820/

கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை குறித்து இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மகேஷ், Tnnews 24 டிஜிட்டல் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி…

https://fb.watch/hgy-y32j7s/

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!