Homeஅரசியல்ஜனதா தள கொடி, போர்டை தூக்கியெறிந்த காங்கிரசார்

ஜனதா தள கொடி, போர்டை தூக்கியெறிந்த காங்கிரசார்

ஜனதா தள அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து கொடி மற்றும் போர்டை தூக்கியெறிந்த காங்கிரசார் அங்கு தங்களது கட்சி கொடியை ஏற்றினர்.

திருவண்ணாமலை பேகோபுரத் தெரு மலையேறும் பாதைக்கு அருகில் ஐக்கிய ஜனதா தளத்தின் அலுவலகம் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் இருந்த இடத்தை (சுமார் 1ஏக்கர்) 1960ல் அப்போதைய நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், மேல்சபை உறுப்பினராகம் இருந்த அண்ணாமலை பிள்ளை என்பவர் தானமாக பெற்றுள்ளார்.

1969ல் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. இதைத் தொடர்ந்து அந்த இடம் ஜனதா தளத்தின் கட்டுபாட்டில் வந்தது. இந்த இடத்தை நகர காங்கிரஸ் கமிட்டிக்கு வழங்க கேட்டு நகர காங்கிரஸ் தலைவர் வெற்றிச் செல்வன், சட்ட போராட்டம் நடத்தி வந்தார். அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார். அந்த இடம் 61 வருடங்களாக தங்களின் பாத்தியத்தில் இருப்பதாக ஜனதா தளத்தினர் மனு அளித்திருந்தனர்.

இருதரப்பு ஆவணங்களையும் பரிசீலித்த கோட்டாட்சியர் அந்த இடம் மாவட்ட ஜனதா தளத்திற்கு பாத்தியப்பட்டதற்கான ஆவணங்கள் ஏதும் வழங்கப்படவில்லை என்பதை குறிப்பிட்டு ஜனதா தளம் பெயரில் இருந்த பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஜனதா தள கொடி, போர்டை தூக்கியெறிந்த காங்கிரசார்

இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சியின் அரசியலமைப்பை பாதுகாப்போம் கையோடு கை கோர்ப்போம் என்ற பரப்புரை இயக்கத்தின் மண்டல ஆலோசனை கூட்டம் வேங்கிக்காலில் உள்ள குமரன் மகாலில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்டபாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் முடிந்ததும் கும்பலாக புறப்பட்டு ஜக்கிய ஜனதா தளம் இயங்கி வந்த இடத்திற்கு சென்ற காங்கிரசார், ஜக்கிய ஜனதா தளத்தின் கொடி கம்பத்தையும், போர்டையும் பெயர்த்து எடுத்தனர். பிறகு அந்த இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதன்பிறகு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் குமார் தலைமையில், நகர காங்கிரஸ் தலைவர் வெற்றிச் செல்வன் முன்னிலையில் அந்த இடத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

ஜனதா தள கொடி, போர்டை தூக்கியெறிந்த காங்கிரசார்

மாநில தலைவர், ஈரோடு வேட்பாளர் வந்திருந்த நேரத்தில் காங்கிரசார் அதிரடி காட்டி 1960ல் வழங்கப்பட்ட இடத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!