Homeஅரசியல்பாஜக ஆர்பாட்டத்திற்காக குவிக்கப்பட்ட போலீசார்

பாஜக ஆர்பாட்டத்திற்காக குவிக்கப்பட்ட போலீசார்

பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு 3 டிஎஸ்பி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் பொங்கல் தொகுப்பில் தேங்காய் சேர்த்து வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தும் வண்ணமும், விலையில்லா தேங்காய்களை பொதுமக்களுக்கு வழங்கி அரசின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே பாஜக விவசாய அணி சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ஆர்.பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், பாஜக மாவட்ட தலைவர் கே.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பாஜக ஆர்பாட்டத்திற்காக குவிக்கப்பட்ட போலீசார்

இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ரமேஷ், முருகன், மாவட்ட பொருளாளர் எஸ்.பி.கே.சுப்பிரமணியன், மாவட்டத் துணைத் தலைவர்கள் அருணை ஆனந்தன், கவிதா, மாநில செயற்குழு உறுப்பினர் கருணாகரன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளர் அருணை காந்தி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் நேரு, தருமன், விஜயன், மாவட்ட இளைஞரணி தலைவர் சந்தோஷ் பரமசிவம், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் புகழ் மூவேந்தன், பிரச்சார அணி மாவட்ட துணைத் தலைவர் மலர்கொடி, மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் ஆர்.ரேகா,விவசாய அணி பொதுச் செயலாளர்கள் ஹரிஹரன், தண்டபாணி, பாக்யராஜ் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக அனைவரையும் மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். முடிவில் மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் எஸ்.குப்புசாமி நன்றி கூறினார்.

பவுர்ணமியை காரணம் காட்டி பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. சின்னகடைத் தெருவில் பாலம் அமைக்கும் வேலையால் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் ஒரு அமைப்புக்கு மட்டும் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதையும், தற்போது சின்னகடைத் தெரு போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டி போலீஸ் அதிகாரிகளிடம் பாஜக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தேங்காய்களை எடுத்து வந்து விநியோகிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்தனர். மீறினால் கைது செய்ய போலீஸ் வேன்களிலும், பஸ்சிலும் போலீசார் தயாராக இருந்தனர். மேலும் 3 டிஎஸ்பி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தேங்காய் மூட்டைகளை ஏற்றி வந்த ஆட்டோவை ஆர்ப்பாட்டத்தில் போலீசார் அனுமதிக்காமல் வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். பொதுமக்களுக்கு தேங்காய்களை வழங்க அனுமதிக்காவிட்டால் சாலைமறியலில் ஈடுபடுவோம் என மைக்கில் பாஜக மாவட்ட தலைவர் கே.ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

பாஜக ஆர்பாட்டத்திற்காக குவிக்கப்பட்ட போலீசார்

இதைத் தொடர்ந்து தேங்காய் ஏற்றி வந்த ஆட்டோவை போலீசார் விடுவித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு தேங்காய்களை பொதுமக்களுக்கு பாஜகவினர் இலவசமாக வழங்கினர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!