Homeஅரசியல்அதிமுக பங்கேற்ற கூட்டத்தில் கவர்னரை கண்டித்து தீர்மானம்

அதிமுக பங்கேற்ற கூட்டத்தில் கவர்னரை கண்டித்து தீர்மானம்

அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்ற மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் கவர்னரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி 17-வது சாதாரண குழு கூட்டம் இன்று(10ந் தேதி) திருவண்ணாமலை காந்திநகர் லட்சுமி ராம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு மற்றும் திட்டக்குழுவின் தலைவர் பார்வதி சீனுவாசன்(திமுக) தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் கருணாநிதி அனைவரையும் வரவேற்றார்.

அதிமுக பங்கேற்ற கூட்டத்தில் கவர்னரை கண்டித்து தீர்மானம்

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் ஆராஞ்சி ஆறுமுகம், இல.சரவணன், மனோகரன், நந்தினி நரேஷ்குமார், கோவிந்தராசன், அரவிந்தன், கௌரிராதாகிருஷ்ணன், சகாதேவன், அருணாகுமரேசன், கஸ்தூரி, முருகேசன், செந்தில்குமார், சகுந்தலா, தவமணி, பூங்கொடி, முத்து, தெய்வமணி, சுஜாதா, பட்டம்மாள் உள்பட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏவின் மகனும், மாவட்ட கவுன்சிலருமான அரவிந்தன், கோவிந்தராசன், தவமணி உள்ளிட்ட அதிமுக கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதலாவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்ட உரையில் திராவிட மாடல் என்ற வார்த்தையை படிக்காமல் தவிர்த்த தமிழ்நாடு ஆளுநர் அவர்களை இக்குழுக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் அமைதி பூங்கா தமிழ்நாடு, சமூக நீதி, சுயமரியாதை, திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளையும் மற்றும் பெரியார், அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகள், கோட்பாடுகளை பின்பற்றி பார் போற்றும் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு அரசின் கொள்கைகளை தவிர்த்து பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை இம் மாவட்ட ஊராட்சி குழு வன்மையாக கண்டிக்கிறது என்ற 140வது தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக பங்கேற்ற கூட்டத்தில் கவர்னரை கண்டித்து தீர்மானம்

முடிவில் முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) க.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

மாவட்ட கவுன்சிலர்களுக்கு பொங்கல் பரிசும், பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டன.

முன்னதாக மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்கள் பணியாளர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடினர்.

மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் கவர்னரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் அரவிந்தனிடம் கேட்ட போது மாவட்ட ஊராட்சியில் திமுக மெஜாரிட்டியாக உள்ளது, இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து தெரியாது என்றார்.


தொடர்புடைய செய்தி…

வேளாண் சட்டம்-திமுகவின் கண்டன தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!