Homeஅரசு அறிவிப்புகள்திருவண்ணாமலை: சுகாதாரதுறையில் நர்சுகள் நியமனம்

திருவண்ணாமலை: சுகாதாரதுறையில் நர்சுகள் நியமனம்

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் 129 செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

திருவண்ணாமலை: சுகாதாரதுறையில் நர்சுகள் நியமனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்

செவிலியர்(Staff Nurses)/ நடுத்தர நிலை சுகாதார வழங்குநர்(MLHP)
நிரப்பப்பட உள்ள பணியிடங்கள்- 129

தகுதிகள்

செவிலியர் பட்டப்படிப்பு(DGNM) இளங்கலை செவிலியர் பட்டம்(BSC.,NURSING)  அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் செவிலியர் கல்லூரிகள் மற்றும் இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் படித்தவர்கள்

வயது– 50 வயதுக்குட்பட்டவர்கள்

சம்பளம்– மாதம் ரூ.18 ஆயிரம்

திருவண்ணாமலை: சுகாதாரதுறையில் நர்சுகள் நியமனம்

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

1. பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
2. இருப்பிடச் சான்று
3. சாதிச் சான்று
4. மற்றுத்திறனாளி / விதவை / கணவனால் கைவிடப்பட்டவர் / மூன்றாம் பாலினத்தவர் சான்று.
5. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்தமைக்கான சான்று
அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து இருப்பின் சம்மந்தப்பட்ட மாவட்ட
துறை தலைவரிடம் DDHS (சுகாதார பணிகளின் துணை இயக்குநர்), JDHS (சுகாதார இணை இயக்குநர்), DEAN (மருத்துவ கல்லூரி முதல்வர்) சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து இருப்பின் இணை இயக்குர் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
6. TNNMC (தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவ கவுன்சில்) பதிவுச் சான்று.

See also  கிராம உதவியாளர் பணி-எழுத்து தேர்வு நடக்கும் இடங்கள்

நிபந்தனைகள்

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. மேலும் எந்த நேரத்திலும் பணியிலிருந்து விடுவிக்கப்படலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர் மற்றும் துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள்.
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுதி உடைய ஆவண நகல்களுடன் மாவட்ட நலவாழ்வு சங்கம், திருவண்ணாமலை அலுவலகத்தில் 27.01.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

காலி பணியிடங்கள் நியமனம் செய்வது மாறுதலுக்குட்பட்டது.
இனச்சுழற்சி வாயிலாக காலி பணியிடங்கள் நியமனம் செய்யப்படும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!