Homeசெய்திகள்அமைச்சர் வேலு விழாவில் சாமியாடிய பெண்கள்

அமைச்சர் வேலு விழாவில் சாமியாடிய பெண்கள்

அமைச்சர் வேலு கலந்து கொண்ட விழாவில் காளி பாடலுக்கு பெண்கள் சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழர் திருநாள் விழா

திருவண்ணாமலை காந்தி நகர் மைதானத்தில் அருணை தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நாதஸ்வர இசை, மங்கள இசை, பரதநாட்டியம், சுகி.சிவத்தின் பட்டிமன்றம், போர்பறை, தெருக்கூத்து போன்றவைகள் நடைபெற்றது.

அமைச்சர் வேலு விழாவில் சாமியாடிய பெண்கள்

தொண்டாற்றியவர்களுக்கு விருது

மாலையில் இன்னிசை கிராமிய இசை விருந்து நடைபெற்றன. பிறகு தமிழ் தொண்டாற்றிய ஆரணி தமிழ் சங்கத் தலைவர் கவிஞர் பரசுராமனுக்கு மறைமலை அடிகள் விருதும், சமூக தொண்டாற்றிய தலையாம்பள்ளம் சமூக சேவகர் மணிமாறனுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விருதும், கலைத் தொண்டாற்றிய வெம்பாக்கம் த.குமாருக்கு கலைவாணர் விருதும், ஆன்மீக தொண்டாற்றிய வேட்டவலம் புலவர் தங்க.விசுவநாதனுக்கு கிருபானந்த வாரியார் விருதும் வழங்கப்பட்டன.

அமைச்சர்கள்

இவற்றை அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினார்கள். கோலப்போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கலெக்டர் பா.முருகேஷ், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அண்ணாதுரை எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி, ஜோதி, முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், எ.வ.வே.கம்பன், நகர திமுக செயலாளர் கார்த்தி வேல்மாறன், அருணை தமிழ்ச்சங்க செயலாளர் வே.ஆல்பர்ட், பொருளாளர் எம்.இ.ஜமாலுதீன், இணைச் செயலாளர் எ.வ.குமரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,

மொச்ச கொட்ட கடலு சுண்டலு

தமிழ்நாடு என யாரோ எதையோ சொல்ல போக போட்டி போட்டுக் கொண்டு தமிழ் வரலாற்றை கூறுகின்றனர். எனக்கும் பக்திக்கும் தூரம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் பக்தி இலக்கியம் எனக்கு தூரம் அல்ல. அதைப் படித்ததால் தான் பகுத்தறிவு உள்ளவனாக ஆக முடிகிறது.

See also  மாடி வீடு உள்பட 17 வீடுகளை இடிக்கும் பணி

நான் படிக்கிற காலத்தில் சிரங்கு நோய் அதிகம். படிக்கிற காலத்தில் ஓரங்க நாடகத்தில் ‘மொச்ச கொட்ட கடலு சுண்டலு, வெச்சிகிட்டு தின்னதால பிச்சுகிட்டு போகுதய்யா கடவுளே, சிரங்கு பிச்சிக்கிட்டு போகுதய்யா கடவுளே, காயாத பால்ல கொஞ்சம் காப்பி போட்டு குடிச்சதால கையெல்லாம் பிக்குதய்யா கடவுளே, கையெல்லாம் பிக்குதய்யா கடவுளே’ என எழுதினேன்.

இதை நான் எழுதியதற்கு தமிழ் மொழியில் இருந்த ஆர்வமே தவிர வேறு எதுவும் இல்லை. மேல்படிப்பை முடித்து பட்டதாரி ஆக அண்ணா யுனிவர்சிட்டியில் சேர நினைக்கிற காலத்தில் நாடகம் போட்டோம்.

கன்னித் தமிழே வா

அப்போது ஆயிரம் நிலவே வா என்ற பாடலுக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் அறிமுகமானார். அப்போது அந்த பாடல் பாணியில் ‘கன்னி தமிழே வா, அல்லி நடை பயில ஆசையிலே மனம் துவள மெல்லிய உந்தன் அசைவினிலே மேனியெல்லாம் துவன்று வர என்ன தயக்கம் இன்னும் வர ஏனோ நீ நடை பயில கன்னித் தமிழே உன்னை அடைய என் ஆவல் தூண்டுதடி கன்னித் தமிழே வா’ என்ற பாடலை இயற்றினேன்.

இவர் அவர் பேசினார்

கன்னி தமிழே வா என்ற பாடலை அமைச்சர் வேலு, பாடி காட்ட மேடையில் இருந்த அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கைதட்டி பாராட்டினர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது,

ரமண மகரிஷி

நான் சட்டமன்ற உறுப்பினராக உள்ள திருச்சுழிக்கும், திருவண்ணாமலைக்கும் பெரிய தொடர்பு உள்ளது. ஆன்மீக உலகில் போற்றப்படுகிற ரமண மகரிஷி பிறந்த ஊர் திருச்சுழி ஆகும். அவர் திருவண்ணாமலைக்கு வந்து ரமணாஸ்ரமத்தை தோற்றுவித்தார்.

See also  தரிசனத்திற்கு பக்தர்கள் தவிப்பு- கோயிலுக்கு சென்று கலெக்டர் ஆய்வு

இன்னிசை வேந்தர் வேலு

அமைச்சர் வேலுவை ஒரு செயல் வீரராக தான் அறிந்திருக்கிறோம். அவருக்கு தமிழ் மீது தனியாத ஆர்வம். ஏவாமலே வேலை செய்யக் கூடியவர் எ.வ.வேலு என கலைஞரால் பாராட்டு பெற்றவர். செயற்கரிய காரியங்களை நிறைவேற்றிக் காட்டுபவர். அவர் இலக்கியத்தில் மட்டும் ஆர்வம் கொண்டவராக இல்லாமல் பாடக் கூடிய இன்னிசை வேந்தராகவும் இருந்திருக்கிறார். இது தெரிந்திருந்தால் இங்கு நடைபெற்ற இன்னிசை கச்சேரியில் பாட வைத்திருக்கலாம்.

தமிழ் மொழிக்கு சாபக்கேடு

வாழ்வியலுக்கு இலக்கியம் சொன்ன ஒரே மொழி தமிழ் மொழி. தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் ஒரு சாபக்கேடு எப்போதும் இருக்கிறது. தமிழ் வரலாற்றை எப்போது சொன்னாலும் யாராவது ஒருவர் இதெல்லாம் இருக்கிறதா? என கேட்பார். தமிழ்நாடு என சொல்வதற்கு கூட கேள்விக்குறியாகி உள்ள காலகட்டம் இப்போது வந்திருக்கிறது.

சமஸ்கிருதம் போல் இல்லாமல் தானாகவே தோன்றிய மொழி தமிழ் மொழி. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி என்பதை தமிழ் அறிஞர்கள் கூட ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் அசோகன் பிராமியில் இல்லாத ஒரு ‘ன்’வந்த போது தான் ஆமாம் என ஒத்துக் கொண்டனர்.

உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம்

கீழடிக்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளது. கீழடி எழுத்தறிவை பெற்றிருக்கக் கூடிய ஒரு சமுதாயம். தமிழில் தனியாக எழுத கூடிய மரபை பின்பற்றியவர்கள் தமிழ் படித்த பண்டிதர்களோ, புலவர்களோ அல்ல. சாதாரண குயவர்கள். தங்களது பானையில் தமிழில் எழுதி இருக்கிறார்கள். எழுத்தறிவு பெற்ற சமுதாயம் கீழ் மட்டத்திலே இருக்கக்கூடிய சாதாரண சமுதாயத்தில் இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

கீழடியில் ஒரு 20 கோடி செலவில் உலகளாவிய, உலகத் தரம் வாய்ந்த ஒரு அருங்காட்சியகம் வர உள்ளது. பொறுனை அருங்காட்சியகம் ரூ. 35 கோடியில் திருநெல்வேலியில் அமைக்கப்படுகிறது.

See also  திருவண்ணாமலை கலெக்டருக்கு நெருக்கடி

சேந்தன் காசுகள்

இதையெல்லாம் சொல்வதால் திருவண்ணாமலை குறைந்து விட்டதாக கருதக்கூடாது. செங்கத்திலே கிடைத்திருக்கிற நடுக்கற்கள் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றில் மிக குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவைகள்.

செங்கத்தில் கிடைத்த சேந்தன் காசுகள் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. தமிழில் பொறித்து இருக்கக்கூடிய அந்த காசுகள் செங்கத்தில் தான் கிடைத்திருக்கிறது. பாண்டிய நாட்டில் பெருவழுதி என குறிப்பிடப்பட்டுள்ள காசுகளை கண்டிருக்கிறேன். அதன் பிறகு செங்கத்தில் தான் பார்த்திருக்கிறேன். மிகப்பெரிய ஒரு பாரம்பரியமும், வரலாறும் நம்முடைய பகுதியில் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் வேலு விழாவில் சாமியாடிய பெண்கள்

விழாவில் மெலோடிஸ் மாலதி லட்சுமணனின் இன்னிசை கச்சேரியை அமைச்சர் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் ரசித்து கேட்டனர். சினிமா பாடல்களை பாட அமைச்சரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு மாலதி லட்சுமணன், சினிமா பாடல்களோடு சாமி பாடல்களையும் பாடினார்.

முரண்டு பிடிக்காத முண்டகக்கண்ணி அம்மா
மொறைச்சு பாக்காத பாளையத்து அம்மா யம்மா
கண்ண கண்ண உருட்டாத கருமாரி அம்மா
கத்திய நீ காட்டாத காளிதேவி அம்மா
அவ ஆக்கி வச்ச சோத்த நீ மூக்கு முட்ட புடிச்ச
அவ ஊத்தி வச்ச கூழை உன் நாக்கு ருசிக்க குடிச்ச

அமைச்சர் வேலு விழாவில் சாமியாடிய பெண்கள்

அமைச்சர் வேலு விழாவில் சாமியாடிய பெண்கள்

என்ற கோட்டை மாரியம்மன் படப்பாடலை இசைக்குழுவினர் பாடினார். இந்த பாடலுக்கு காளி வேடமிட்டவர், கையில் தீச்சட்டியுடன் சுழன்று, சுழன்று ஆக்ரோஷமாக ஆடினார். இதைப்பார்த்த பெண்கள் சிலர் விழா அரங்கில் சாமி வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!