திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு தாசில்தார்கள் மாற்றம் செய்யப்பட்டனர். திருவண்ணாமலை தாசில்தாராக சரளா நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தாசில்தர்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி திருவண்ணாமலை தாசில்தாராக பணியாற்றி வந்த எஸ்.சுரேஷ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பறக்கும் படை சிறப்பு தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.
செய்யாறு சிப்காட் தாசில்தாராக இருந்த எஸ்.சரளா திருவண்ணாமலை தாசில்தாராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
திருவண்ணாமலை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இருந்த எம்.சாப்ஜான் கீழ்பென்னாத்தூர் தாசில்தாராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். கீழ்பென்னாத்தூர் தாசில்தாராக இருந்த கே.சர்க்கரை தண்டராம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டிருக்கிறார்.
தண்டராம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இருந்த ஜெ.சுகுணா. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலக சிறப்பு தாசில்தாராக பணியாற்றிய அப்துல் ரகூப்புக்கு பதிலாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அப்துல் ரகூப் தண்டராம்பட்டு தாசில்தாராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தண்டராம்பட்டு தாசில்தாராக இருந்த எஸ்.பரிமளா திருவண்ணாமலை சமூக பாதுகாப்பு திட்டதாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் உடனடியாக புதிய பதவியில் சேர வேண்டும் எனவும் பதவி மாற்றம் அல்லது விடுப்பு வழங்குவதற்கான எந்த ஒரு கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் புதிய பதவியில் உடனடியாக சேராதது, அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் மாற்றல் உத்தரவில் கலெக்டர் முருகேஷ் எச்சரித்துள்ளார்.