திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தாவின் கைலாசா ஆன்மீக தூதரகத்தில் கோடி ருத்ராட்சங்களை கொண்டு திருவண்ணாமலை தேர் தயாராகி வருகிறது.
பெங்களுரு பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சுவாமி நித்யானந்தா, தனித்தீவு ஒன்றை வாங்கி கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கி அதை இந்துக்களின் புனித பூமியாக அறிவித்திருக்கிறார். இதை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.
நித்யானந்தர் அவதரித்த திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் இருந்த அவரது ஆசிரமம், கைலாசாவின் ஆன்மீக தூதரகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு தினமும் 3 வேலையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பவுர்ணமி நாட்களில் 50 ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பெங்களுரு பிடதியில் இருந்த தேர்கள், திருவண்ணாமலை கைலாசா ஆன்மீக தூதரகத்திற்கு கனரக லாரி மூலம் கொண்டு வரப்பட்டன. மொத்தம் 3 தேர்கள் எடுத்து வரப்பட்டுள்ளது.
இதில் 2 தேர்கள் திருவாரூர் ஆழித்தேர் போன்ற வடிவமைப்பிலும், மற்றொரு தேர் மேற்கூரை முழுவதும் கோடி ருத்ராட்சங்கள் பதிக்கப்பட்டு திருவண்ணாமலை தேராக தயாராகி வருகிறது. பரமசிவன், பார்வதிதேவி மற்றும் நித்யானந்தர் சிலைகளுடன் இந்த தேர்கள் மகாசிவராத்திரி அன்று பக்தர்களுக்கு காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமன்றி சுவாமி நித்யானந்தரின் அவதார திருநாளில் அனுமதி பெற்று கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் ஆசிரம வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மட்டுமன்றி திருவண்ணாமலை கைலாசா ஆன்மீக தூதரகத்தில் இந்துக்கள் பயன்படுத்திய பராம்பரிய பொருட்கள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.