Homeசெய்திகள்திருவண்ணாமலை மாவட்டத்தில் வருமான வரி வசூல் ரூ.200 கோடி

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருமான வரி வசூல் ரூ.200 கோடி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.200 கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் தெரிவித்தார்.

புதிய அலுவலகம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் பின்புறம் ரூ.4 கோடியே 14 லட்சம் செலவில் புதியதாக வருமான வரித்துறை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த அலுவலகத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் இரா.ரவிச்சந்திரன் திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது,

ரூ. 200 கோடி வரி வசூல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 200 கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டுள்ளது நாட்டில் உள்ள 640 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாக உள்ளன.

அதில் தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் பரப்பளவில் 2வது பெரிய மாவட்டமாகவும், மக்கள் தொகையில் 4வது மாவட்டமாகும் விளங்கும். தொழிற்சாலைகள் இல்லாததுதான் திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒரே பின்னடைவாகும்.

ஆட்டோ மொபைல் தொழிற்சாலை

தற்போது செய்யாறில் ரூ. 12000 கோடி முதலீட்டில் ஆட்டோ மொபைல் தொழிற்சாலை, மின் உதிரி பாக தொழிற்சாலைகள் வந்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வருமான வரித்துறை பணியாளர்கள் குறைந்த அளவிலும் வேறு வெவ்வேறு மாநிலத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் முழு ஈடுபாடுடன் செயல்பட்டு வருகின்றனர்.

See also  2555 ஆணிகள் கொண்ட படுக்கையில் யோகாசனம்

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் வருமானவரி முதன்மை ஆணையர் ஜெயந்தி கிருஷ்ணன், தலைமை இயக்குநர் சுனில்மாத்தூர், முதன்மை ஆணையர் சஞ்சய்குமார், ஆணையர் பழனிவேல்ராஜன், திருவண்ணாமலை மாவட்ட வருமான வரி அலுவலர் வடிவேலு, சுப்பிரமணியன் ஆகியோர் பேசினார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருமான வரி வசூல் ரூ.200 கோடி

பிறகு செய்தியாளர்களிடம் முதன்மை தலைமை ஆணையர் இரா.ரவிச்சந்திரன் கூறியதாவது,

திருவண்ணாமலையில் வருவான வரித்துறையின் புதிய அலுவலகம் அடிக்கல் நாட்டப்பட்டு 14 மாதங்களிலே பில்டிங் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. திருவண்ணாமலை மண்டலம் வந்து வருமான வரி விதி துறைக்கு மிக முக்கியமானதாகும். திருவண்ணாமலையில் தொழில் வளர்ச்சிக்காக நிறைய பேர் முதலீடு செய்து இருக்கிறார்கள். எங்களுக்கு அதன் மூலம் வரி கிடைத்து வருகிறது. அதை மனதில் வைத்து தான் திருவண்ணாமலையில் புதிய அலுவலகத்தை கட்டி இருக்கிறோம்.

நவீன தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களில் திருவண்ணாமலை அலுவலகம் நவீன தொழில்நுட்பத்துடன் போதிய வசதியுடன் கட்டப்பட்டிருக்கிறது. அதன்படி வருமான வரி செலுத்துபவர்கள் இனிமேல் வேலூருக்கு, சென்னைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த அலுவலகத்திலேயே தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

See also  மணமகள் அண்ணன் உள்பட 4 பேர் பலி

இந்தியாவில் வருமான வரி கட்டக்கூடிய 7 கோடி பேரில் தமிழ்நாட்டில் 25 லட்சம் பேர் உள்ளனர். தமிழ்நாடு அகில இந்திய அளவில் 4வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் வருமான வரி செலுத்தாதவர்களை எங்களுடைய சிஸ்டம் மூலம் கண்டுபிடித்து விடுவோம்.

பான் நம்பர் மூலம்

இடம் வாங்கி இருந்தாலும், வங்கியில் வைப்புத் தொகை வைத்திருந்தாலும் அல்லது வெளிநாடு பண பரிவர்த்தனை செய்து இருந்தாலும் எங்களுக்கு தகவல் வந்துவிடும். பான் நம்பர் மூலம் இந்த தகவல்கள் கிடைத்தவுடன் ஏன் நீங்கள் வருமான வரி செலுத்தவில்லை? என சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு வசூல் செய்வோம். 25 சதவீதம் கூடுதல் வரியை கட்டி வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுங்கள், இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிப்போம். அந்த முறையில் வரி வசூல் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் சென்ற வருடத்தை விட இந்த வருடம் வருமான வரி வசூல் 32 சதவீதம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி எங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ரூ. 98 ஆயிரம் கோடி வசூல் செய்து விட்டோம். மார்ச் மாதத்திற்குள் மீதியை வசூல் செய்து விடுவோம்.

See also  சிறுவன்-சிறுமிகள் உள்பட 9 பேர் தீக்குளிக்க முயற்சி

சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு

வருமான வரித்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. அரசியல் காரணங்களுக்காக சோதனைகள் நடைபெறுவதில்லை. 2 வருஷம் கண்காணித்த பிறகு தான் சோதனையே நடக்கும். மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் அரசு எங்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்திருக்கிறது. சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் சோதனைகளை நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் வருமான வரிதுறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், ஆடிட்டர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!