Homeசெய்திகள்ஏடிஎம் கொள்ளையர்களை பிடிப்பதில் பின்னடைவு ஏன்?

ஏடிஎம் கொள்ளையர்களை பிடிப்பதில் பின்னடைவு ஏன்?

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் கொள்ளையர்களுக்கு உதவியதாக 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

ரூ.72 லட்சம்

திருவண்ணாமலையில் தேனிமலை, மாரியம்மன் கோயில் தெரு ஆகியவற்றில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம், கலசப்பாக்கத்தில் ஒன் இண்டியா ஏடிஎம், போளுரில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் ஆகியற்றில் கேஸ் வெல்டிங் மிஷினை பயன்படுத்தி உடைத்து அதில் இருந்த ரூ.72 லட்சத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி விட்டது.

மேவாட் கொள்ளையர்கள்

தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவத்தில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அரியானா மாநில போலீசாரின் உதவியோடு முக்கிய குற்றவாளிகளான முகமது ஆரீப், ஆஜாத் ஆகிய 2 பேரை திருவண்ணாமலை எஸ்.பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

ஏடிஎம் கொள்ளையர்களை பிடிப்பதில் பின்னடைவு ஏன்?
அப்சர் உசேன்

சிசிடிவி காட்சிகளில் பதிவு

திருவண்ணாமலையில் கைவரிசையை காட்டிய மேவாட் கொள்ளையர்கள் கோலாரில் ரூம் எடுத்து தங்கி திட்டம் தீட்டி செயல்படுத்தியது தெரிய வந்தது. திருவண்ணாமலையில் கொள்ளையடித்த பணம் உள்ள பையுடன் அவர்கள் தாங்கள் தங்கியிருந்த ரூமிற்கு திரும்பியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து கோலாரில் அவர்களுக்கு ரூம் எடுக்க உதவிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்சர் உசேனை போலீசார் கைது செய்தனர். இதே போல் அவர்களுக்கு பண பரிவர்த்தனை செய்ய உதவிய கோலாரைச் சேர்ந்த குத்ரத் பாஷா என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

See also  2 யானை பலம் கிடைத்திருக்கிறது - கலெக்டர் உற்சாகம்
ஏடிஎம் கொள்ளையர்களை பிடிப்பதில் பின்னடைவு ஏன்?
குத்ரத் பாஷா

ஜெயிலில் அடைப்பு

2 பேரையும் இன்று இரவு திருவண்ணாமலைக்கு அழைத்து வந்த போலீசார் அவர்களை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி கவியரசன் முன்பு ஆஜர் படுத்தினர். அவர்களை மார்ச் 7ந் தேதி வரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஏடிஎம் கொள்ளை வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற கொள்ளையர்களை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பணம் டொபாசிட்

ஏடிஎம்மில் மோசடி செய்தும், உடைத்தும் திருடும் பணத்தை கொண்டு மேவாட் கொள்ளையர்கள் ஜாலியாக செலவு செய்யவோ, பொருட்களை வாங்கவோ மாட்டார்கள். கை செலவுக்கு மட்டும் சில லட்சங்களை வைத்துக் கொண்டு ஏடிஎம் மிஷின் மூலமாகவே அவர்கள் தங்களது வங்கிக் கணக்குக்கோ அல்லது தெரிந்தவர்கள், உறவினர்களது வங்கிக் கணக்குக்கோ திருடிய பணத்தை அனுப்பி விடுவார்கள்.

2021 ம் ஆண்டு சென்னையில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட ஏடிஎம் மிஷின்களில் சென்சாரை செயல் இழக்க செய்துவிட்டு ஏடிஎம் கார்டு மூலமாக பணத்தை திருடிய மேவாட் கொள்ளையர்கள் அதே ஏடிஎம் மிஷின் மூலம் திருடிய பணத்தை தங்களது வங்கி கணக்கு அனுப்பியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

See also  நடிகர் சூர்யாவுக்கு எதிராக இளைஞர்கள் , மாணவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் ஏடிஎம் மிஷின்களை அவர்கள் கேஸ் வெல்டிங் இயந்திரத்தால் உடைத்து விட்டதால் கொள்ளையடித்த பணத்தை கோலாருக்கு சென்று அனுப்பி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு உதவியாக இருந்ததால்தான் குத்ரத் பாஷாவை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

குஜராத்தில் பிடிபட்டவர்கள் யார்?

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் 2 பேர் மட்டுமே அரியானாவிற்கு விமானம் மூலம் தப்பிச் சென்றதாகவும், குஜராத்தில் விமானம் மூலம் தப்ப முயன்ற 6 பேரை பிடித்து விசாரித்து வருவதாகவும் ஐஜி கண்ணன் கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில் அவர்களை பற்றிய விவரம் இன்னும் தெரிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.

ஏடிஎம் கொள்ளையர்களை பிடிப்பதில் பின்னடைவு ஏன்?
கடந்த ஆண்டு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட மேவாட் கொள்ளையர்கள்

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் காட்டப்படும் ராஜஸ்தான் மாநிலம் ஹவாரியா(பவாரியர்) போன்றே அரியானா மாநிலம் மேவாட் மாவட்டமும் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் அதிகம் உள்ள இப்பகுதியில் ஊருக்குள் சென்று கொள்ளையர்களை பிடிப்பது என்பது சிரமமானதாகும். இதன் காரணமாகவே மற்ற கொள்ளையர்களை பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!