Homeஅரசு அறிவிப்புகள்இ-சேவை மையம் துவங்க விண்ணப்பிக்கலாம்-கலெக்டர்

இ-சேவை மையம் துவங்க விண்ணப்பிக்கலாம்-கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் “அனைவருக்கும் இ-சேவை மையம்” திட்டத்தின் கீழ் இ -சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம் (TACTV)இ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் (PACCS) தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் (MahalirThittam). மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் (CSC VLEs) ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்த மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்க வருகின்றது. மேலும் அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது.

See also  வலி மாத்திரையால் கிட்னி பாதிக்கும்

இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது, ‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழிசேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இ-சேவை மையம் துவங்க விண்ணப்பிக்கலாம்-கலெக்டர்

இத்திட்டத்தின் நோக்கமானது அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையினை அதிகரித்து இ-சேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து. மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘அனைவருக்கும் இ-சேவைமையம்’ திட்டத்தின் கீழ் இ-சேவைமையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையமுறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவுசெய்ய இயலும்.

இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல்பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in/ –  https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தவும். விண்ணப்பங்களை 15.03.2023 நேரம்: 11.30 முதல் 14.04.2023 நேரம்: 20.00 வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இ-சேவை செயல்படுத்துவதற்கான விண்ணப்பக்கட்டணம் ரூ.3000/- ஆகும். நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6000/- ஆகும்.

See also  7ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு முகாம்

இவ்விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்க்குறிய பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல் (Password) ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

3 வருடத்திற்கு மேலாக இ-சேவை மையம் ஆரம்பிக்க அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது வந்தது குறிப்பிடத்தக்கது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!