Homeசெய்திகள்3 ஆயிரம் பாம்புகளை பிடிக்க கலெக்டர் அனுமதி

3 ஆயிரம் பாம்புகளை பிடிக்க கலெக்டர் அனுமதி

சேத்துப்பட்டு அருகே பாம்புகளை பிடித்து விஷம் எடுக்க ஏதுவாக 3 ஆயிரம் பாம்புகளை பிடிக்கும் உத்தரவினை கலெக்டர் வழங்கினார்.

கேன்சர், பாம்பு கடி போன்றகொடிய நோய்களை தீர்க்கும் அருமருந்தாக பாம்பின் விஷம் பயன்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் 1 லிட்டர் பாம்பின் விஷம் ரூ.1 கோடி வரை விலை போவதாக சொல்லப்படுகிறது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வசித்து வரும் இருளர் பழங்குடியின மக்களுக்கு பாம்பு பிடிப்பது, வேட்டையாடுவது போன்றவை வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இவர்களுக்காக இருளர் பாம்பு பிடிப்போர் வாழ்வாதார தொழிற் கூட்டுறவு சங்கம் 1985 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பல்லுயிர் இனப்பெருக்க வன உயிரின சட்டத்தின் கீழ் பாம்பு பிடிக்க தடை விதிக்கப்பட்டதால் இவர்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு பாம்பு பிடிக்க அரசு அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து சேத்துப்பட்டு அருகே பாம்பு விஷம் எடுக்கும் மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

தொழிற் கூட்டுறவு சங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் கெங்காவரம் ஊராட்சிலுள்ள இருளர் காலனியில் திருவண்ணாமலை மாவட்ட இருளர் பாம்பு பிடிப்போர் வாழ்வாதார தொழிற் கூட்டுறவு சங்கம் லிமிடெட்டின் கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் நேற்று திறந்து வைத்தார்

See also  திருவண்ணாமலை டான்காப் இடத்தில் புதிய பஸ் நிலையம்

இருளர் பழங்குடியினத்தைத் சார்ந்த 150 உறுப்பினர்கள் இச்சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் முதன்மைத் தொழில் பாம்பு பிடித்தல் ஆகும். இதனைத் தவிர வேறு எவ்வித தொழிலும் இவர்களுக்கு தெரியாததால் இம்மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

பாம்பு பண்ணையை கலெக்டர் திறந்து வைத்தார்.

பாம்பு விஷம் சேகரிப்பு

இதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையிடமிருந்து 2020-2021 ஆம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத்திட்டத்தின் (Comprehensive Tribal Development Programme – CTDP) கீழ் பாம்புகளின் விஷம் சேகரித்து பதப்படுத்தி வியாபாரம் செய்யும் தொழில் துவங்க ஏதுவாக மூலதன செலவினத்தில் ரூ.18 லட்சமும், வருவாய் செலவினத்தில் ரூ.13.34 லட்சமும் ஆக மொத்தம் ரூ.31.34 லட்சம் பெறப்பட்டுள்ளது.

இதன் மூலதன செலவினத்தில் அலுவலகத்துடன் இணைந்த ஆய்வக அறை, பாம்பு இருப்பு அறை, ஆழ்துளை கிணறு, குழாய் அமைத்தல் மற்றும் நிலம் சமன்படுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருவாய் செலவினத்தில் சங்கத்தின் உரிமக் கட்டணம்,காப்பீடு,பணயாளர் சீருடை மற்றும் பாம்பு பிடிக்கும் கருவிகள், கணக்காளர் சம்பளம் போன்றவை அடங்கும். பாம்புகளிடமிருந்து விஷம் எடுத்து நுண்துகள்களாக்க தேவையான ஆய்வகக் கருவிகள் வாங்க தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டம் (TamilNadu Innovative Initiatives  -TANII) மூலம் ரூ.32.50 லட்சம் நிதி பெறப்பட்டு ஆய்வக கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

See also  கோயில் முன்பு குப்பை, கூளம்- கலெக்டர் டென்ஷன்

பாம்பு பண்ணையை கலெக்டர் திறந்து வைத்தார்.

3 ஆயிரம் பாம்புகளை பிடிக்க அனுமதி

இதனைத் தொடர்ந்து சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கு 3.3.2023 முதல் 31.3.2023 வரை 1000 நல்ல பாம்பு, 500 கட்டுவிரியன், 500 கண்ணாடிவிரியன் மற்றும் 1000 கருட்டை விரியன் உள்ளிட்ட பாம்புகளை பிடித்து வருவதற்காக வனத்துறையினர் வழங்கிய உத்தரவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் வழங்கி சங்க உறுப்பினர் 60 நபர்களுக்கு பாம்பு பிடிப்பதற்கான உபகரணங்களையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் செய்யார் சார் ஆட்சியர் வி.அனாமிகா, துணை ஆட்சியர் கலைவாணி, மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் செந்தில்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவி, ஊராட்சி உதவி இயக்குநர் ரவிக்குமார், பெரணமல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் இந்திரா இளங்கோ, பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்; மோகனசுந்தரம், ஹரி, சேத்பட்டு வட்டாட்சியர் பாலமுருகன், இருளர் பாம்பு பிடிப்போர் வாழ்வாதார தொழிற் கூட்டுறவு சங்க நிறுவனர் எம்.எஸ்.சேகர், இருளர் பாம்பு பிடிப்போர் வாழ்வாதார தொழிற் கூட்டுறவு சங்கத் தலைவர் தெய்வானை மற்றும் அரசு அலுவல்கள் கலந்து கொண்டனர்.

See also  ரயில்,பஸ்,விமானம் மூலம் சுற்றுலா சென்ற மாணவிகள்

Tiruvannamalai Agnimurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!