Homeசெய்திகள்திருவண்ணாமலை ஆவினில் வேலை வாய்ப்பு

திருவண்ணாமலை ஆவினில் வேலை வாய்ப்பு

திருவண்ணாமலை ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை ஆவினில் வேலை வாய்ப்பு

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,

திருவண்ணாமலை மாவட்ட கூடடுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், மூலம் கிராமப்புற விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதி கிடைத்திடவும் மேலும் ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

திருவண்ணாமலை ஆவின் ஒன்றியத்தின் மூலம் பால் உற்பத்தியாளர்களின் மனையடியிலேயே (Door Step) கால்நடை மருத்துவ சிகிச்சை, அவசர சிகிச்சை, செயற்கை கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒன்றியத்தில் ஓப்பந்த அடிப்படையில் 9-கால்நடை மருத்து ஆலோசகர் பணியிடங்கள் உள்ளன. அதில் தற்போது காலியாக உள்ள 8-கால்நடை மருத்துவ ஆலோசகர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

ஒப்பந்த அடிப்படையில், தற்காலிகமாக பணிபுரிய விருப்பம் உள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் தங்கள் உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களுடன் வருகின்ற 29.03.2023 அன்று காலை 10:00 மணிக்கு திருவண்ணாமலை – வேலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, ஆவின் தலைமை அலுவலகம், திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், வேலூர் மெயின்ரோடு, வேங்கிக்கால், திருவண்ணாமலை- 606604 என்ற இடத்தில், நேரடியாக நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்கள் அறிய மின்னஞ்சல் முகவரி:-

இமெயில்: http://gmaavintvmalaimail.com மற்றும் 8838482278 என்ற தொலைபேசி எண் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதே போல் அவர் வெளியிட்டுள்ள இன்னொரு பத்திரிகை செய்தியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலகில் செய்யார் வட்டாரத்தில் காலியாக உள்ள ஒரு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் 31.3.2023 பிற்பகல் 5 வரை வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடந்த 28ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இம்மாதம் 31ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!