Homeஅரசு அறிவிப்புகள்ரூ.14 ஆயிரம் தொகையுடன் தொழிற் பழகுநர் பயிற்சி

ரூ.14 ஆயிரம் தொகையுடன் தொழிற் பழகுநர் பயிற்சி

ரூ.14 ஆயிரம் தொகையுடன் தொழிற் பழகுநர் பயிற்சி

உளுந்தூர்பேட்டை ஐடிஐயில் வருகிற 20ந் தேதி 6 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது. பயிற்சியின் போது ரூ.6 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,

உளுந்தூர்பேட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மண்டல அளவிலான தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் வருகின்ற மார்ச் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.

என்சிவிடி மற்றும் எஸ்சிவிடி முறையில் அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் 2020 முதல் 2022 வரை பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற, அனைத்து பயிற்சியாளர்களும் Trade Apprentices ஆக இந்த பயிற்சியில் சேரலாம்.

ரூ.14 ஆயிரம் தொகையுடன் தொழிற் பழகுநர் பயிற்சி
ஐடிஐயில் சேர்ந்து பயிற்சி பெற முடியாத 8,10,12ம் வகுப்பு கல்வித் தகுதியுடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் Fresher Apprentice ஆக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.

தொழிற்பழகுநர் பயிற்சி பெறுவோருக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.6,000 முதல் ரூ.14,000 வரை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

தொழிற்பழகுநர் பயிற்சிக்குப் பின் DGT(Director General Training)-ஆல் வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும் தொழிற்பழகுநர் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது.

இம்முகாமிற்கு வருகைபுரியும் பயிற்சியாளர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற Portal-லில் பதிவு செய்து அதன் விவரத்தினை அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் எடுத்து வரவேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!