Homeசெய்திகள்46 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருள் திருட்டு

46 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருள் திருட்டு

திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலத்தில் வங்கி நகை மதிப்பீட்டாளர், அடகு கடைக்காரர் வீடுகளில் 46 சவரன் நகை 21/2 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கலசபாக்கம் அடுத்த நாயுடுமங்கலத்தில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவராஜ் மகன் வெங்கடேசன் (வயது 41). இவர் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் வெங்கடேஸ்வரா சீனிவாசா என்ற பெயரில் நகை மற்றும் அடகு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று இரவு இவரது வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பியை வளைத்து நீக்கி ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவிற்கு வழியை ஏற்படுத்தி அதன் வழியாக மர்ம ஆசாமிகள் உள்ளே நுழைந்தனர். வீட்டுக்குள் இருந்த 35 சவரன் தங்க நகையும் 2 கிலோ வெள்ளியும் அவர்கள் திருடிச் சென்றனர்.

46 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி திருட்டு

அடுத்து இதே பாணியில் பக்கத்து வீடான அண்ணாமலை (54) என்பவரின் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து நீக்கி உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் 11 சவரன் தங்க நகையும் அரை கிலோ வெள்ளி நகையும் திருடி சென்றனர். அண்ணாமலை மல்லவாடியில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணி புரிந்து வருகிறார்.

நேற்று இரவு நாயுடுமங்கலம் பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் 2 பேரின் வீட்டிலும் உள்ளவர்கள் காற்றுக்காக வீட்டின் முன்பகுதியில் வந்து படுத்து தூங்கியுள்ளனர். இதை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் உள்ளே நுழைந்து கைவரிசையை காட்டியுள்ளனர்.

தகவல் கிடைத்ததும் டிஎஸ்பி அண்ணாதுரை சம்பவம் நடைபெற்ற வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

இது சம்மந்தமாக கலசபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப் பதிவு செய்தார். மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


Read on…

யாக குண்டத்தில் தங்கம்,வெள்ளி நகைகளை போட்டு பூஜை

256 கடைகளுடன் பூ மற்றும் காய்கறி மார்க்கெட்

திருவண்ணாமலை: சாவிலும் இணை பிரியாத தம்பதி


Join…

திருவண்ணாமலை செய்திகள்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!