Homeசெய்திகள்ரயில் மறியல்-டிஎஸ்பியுடன் காங்கிரசார் வாக்குவாதம்

ரயில் மறியல்-டிஎஸ்பியுடன் காங்கிரசார் வாக்குவாதம்

ராகுல்காந்தி எம்பி பதவி பறிப்பை கண்டித்து திருவண்ணாமலையில் ரயில் மறியல் செய்ய முயன்ற காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீஸ் டிஎஸ்பிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ராகுல்காந்தி தகுதி நீக்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் செய்வதற்காக திருவண்ணாமலை ரயில் நிலையத்தின் முன் இன்று மாலை ஏராளமானோர் திரண்டனர். 

அவர்கள் ரயில் நிலையத்திற்குள் நுழையாதபடி நுழைவு வாயில் முன்பு தடுப்புகளை அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மற்றொரு வாயில் முழுவதுமாக மூடப்பட்டது. ரயில் நிலையத்திற்கு சிறிது தூரத்திலிருந்து மாவட்டத் தலைவர் செங்கம் குமார் தலைமையில் கண்டன கோஷங்கள் முழுங்க காங்கிரசார் ஊர்வலமாக வந்தனர். நுழைவு வாயிலில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். 

ரயில் மறியல்-டிஎஸ்பியுடன் காங்கிரசார் வாக்குவாதம்

இதையடுத்து குறுக்கு வழியாக காங்கிரசார் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். இதனால் போலீஸ் டி.எஸ்.பி குணசேகரன் டென்ஷன் ஆனார். நீங்கள் செய்வது சரியில்லைஇ போலீசுக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறி விட்டு ஒத்துழைப்பு தராமல் இருக்கிறீர்கள் என காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செங்கம் குமாரிடம் கேட்டார். இதனால் போலீஸ் டி.எஸ்.பி குணசேகரன் டென்ஷன் ஆனார். நீங்கள் செய்வது சரியில்லைஇ போலீசுக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறி விட்டு ஒத்துழைப்பு தராமல் இருக்கிறீர்கள் என காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செங்கம் குமாரிடம் கேட்டார்.

இதனால் காங்கிரசாருக்கும்இ டி.எஸ்.பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ரயில் நிலையத்திற்குள் நுழைந்தவர்களை வெளியில் வருமாறு செங்கம் குமார் அழைத்தார். ஆனால் யாரும் வரவில்லை.  மாலை 4 மணிக்கு திருப்பதியிலிருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலை காங்கிரசார் மறித்ததனர். இதனால் டிரைவர் ரயிலை முன்னாடியே நிறுத்தி விட்டார். பிறகு தண்டவாளத்தில் காங்கிரசார் சிலர் படுத்தனர். இதையடுத்து போலீசார் ரயில் முன்பிருந்து அவர்களை அகற்றினர். சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்டு சென்றது. 

ரயில் மறியல்-டிஎஸ்பியுடன் காங்கிரசார் வாக்குவாதம்

பிறகு செங்கம் குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆரணி அடுத்த களம்பூர் ரயில்நிலையத்தில் வடக்கு மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி டிஎஸ்பி ரவிசந்திரன் தலைமையில் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.  இதனை தொடர்ந்து ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!