Homeசெய்திகள்அண்ணாமலையார் கோயிலுக்கு பாதிப்பு வரக்கூடாது

அண்ணாமலையார் கோயிலுக்கு பாதிப்பு வரக்கூடாது

அண்ணாமலையார் கோயிலுக்கு பாதிப்பு வரக்கூடாது என கோயில் அருகில் தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூடவும், பைப் லைன் புதைக்கும் திட்டத்தை மாற்றி அமைக்கவும் கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டார்.

அண்ணாமலையார் கோயிலுக்கு பாதிப்பு வரக்கூடாது

தேர் ஓடும் வீதியான திருவண்ணாமலை மாடவீதி சிமெண்ட் சாலையாக மாற்றும் பணிகள் சுமார் ரூ.25 கோடியில் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் படி குடிநீர் குழாய்களுக்காக பெரிய பைப்புகள் புதைக்கப்படுகிறது. மாடவீதியில் உள்ள மின்கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு மின் கம்பிகள் தரைக்கு கீழ் செல்லும் வகையில் மாற்றப்படுகிறது.

முதல் கட்டமாக குடிநீர் பைப் லைன்களை மாற்று பாதையில் அமைத்திடும் வண்ணம் மாடவீதியை சுற்றிலும் ரோட்டின் ஓரம் பள்ளம் தோண்டப்பட்டு பைப்புகள் புதைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்காக ரூ.3கோடியே 17 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிய தெருவில் இப்பணிகள் முழுமை பெற்ற நிலையில் பேகோபுரம் அருகில் பைப்புகளை புதைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பாறாங்கற்கள் பள்ளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் மூலம் ரோட்டில் கொட்டப்பட்டது. இது கோயில் அஸ்திவாரத்திற்கான கற்கள் என தகவல் பரவியது.

அண்ணாமலையார் கோயிலுக்கு பாதிப்பு வரக்கூடாது

கோயில் அருகில் பள்ளம் தோண்டுவதால் அஸ்திவாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. உடனடியாக இப்பணிகளை நிறுத்த வேண்டும் என இந்து அமைப்புகளும், பாஜகவினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இது பற்றி ஆங்கில பத்திரிகையிலும் செய்தி வெளியான நிலையில் இப்பணியை நேரில் ஆய்வு செய்ய கலெக்டருக்கு அரசிடமிருந்து உத்தரவு வந்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து இன்று பகல் 1 மணி அளவில் கலெக்டர் பா.முருகேஷ், பேகோபுரம் அருகில் பைப்புகள் புதைக்க தோண்டப்பட்ட பள்ளத்தை நேரில் பார்வையிட்டார். அப்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் க.முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் ஆ.கலைமணி, நகராட்சி ஆணையாளர் தட்சணாமூர்த்தி, பொறியாளர் நீலேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பள்ளம் தோண்டுவதனால் அண்ணாமலையார் கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது, கோயிலை பாதுகாக்க வேண்டும், எனவே பள்ளத்தை 1 மணி நேரத்தில் மூடுங்கள், அதற்கு பதில் கோபுரத்தின் எதிர்புறம் சாலையின் அருகில் பள்ளம் தோண்டி பைப்பை புதையுங்கள், ஜீன், ஜூலை மாதங்களில் மழை காலம் என்பதால் பணியை விரைவில் முடியுங்கள் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அண்ணாமலையார் கோயிலுக்கு பாதிப்பு வரக்கூடாது

இதையடுத்து பேகோபுரம் அருகே தோண்டப்பட்ட பள்ளம் ஜே.சி.பி.இயந்திரம் மூலம் மூடப்பட்டது. அண்ணாமலையார் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என பள்ளம் தோண்டும் பணியை மாற்றி அமைக்க உத்தரவிட்ட கலெக்டருக்கு பக்தர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.


Also read this…

யாக குண்டத்தில் தங்கம், வெள்ளி நகைகளை போட்டு பூஜை

256 கடைகளுடன் பூ மற்றும் காய்கறி மார்க்கெட்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!