Homeசெய்திகள்திமுக- அதிமுக கவுன்சிலர்களிடையே மோதல்

திமுக- அதிமுக கவுன்சிலர்களிடையே மோதல்

திருவண்ணாமலை நகரமன்ற கூட்டத்தில் திமுக-அதிமுக கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டது. யோவ் என சொல்லுவதா? மூஞ்சியை உடைத்து விடுவேன் என சொன்னதையடுத்து திமுக கவுன்சிலருக்கும், அதிமுக கவுன்சிலருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமன்ற கூட்ட அரங்கில் நகரமன்ற குழு சாதாரண கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திவேல்மாறன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சு.ராஜாங்கம் பொறியாளர் நீலேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் ந.தட்சிணாமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.

அய்யங்குளத்தில் படகு வசதி

கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் சந்திரபிரகாஷ் பேசுகையில் அண்ணாமலையார் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் தார்சாலை மற்றும் கால்வாயை சீர் செய்து தர வேண்டும். குப்பை தொட்டிகள் அமைத்து கொடுக்க வேண்டும். அய்யங்குளத்தை சீரமைத்து சிறுவர் பூங்கா மற்றும் படகு வசதி செய்து தர வேண்டும். தேரடி தெருவில் உள்ள பூ மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட்டை விரைவில் மாற்றி தர வேண்டும் என்றார். நகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளிலும் பல பகுதிகளில் பாதாள சாக்கடை, கழிவுநீர் கால்வாய், சாலை, குடிநீர் மின்மோட்டார்கள் பழுதடைந்து உள்ளதாக அதிமுக உறுப்பினர்கள் கூறினார்.

திமுக- அதிமுக கவுன்சிலர்களிடையே மோதல்

39 வார்டு குறித்து பேசக் கூடாது

அப்போது குறுக்கிட்ட 1வது வார்டு திமுக கவுன்சிலர் கோவிந்தன், உங்களுடைய வார்டுகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து மட்டும் பேசுங்கள் 39 வார்டுகள் குறித்து பேச வேண்டாம் என்று கூறினார். அதற்கு அதிமுக தரப்பிலிருந்து பதில் சொல்லப்பட்டது.

என்னய்யா யோவ் என்கிறாய், மரியாதை கெட்டுவிடும், மூஞ்சியை உடைத்து விடுவேன் என கவுன்சிலர் கோவிந்தன் கோபமாய் கூறினார். அப்படியெல்லாம் அவர் சொல்லவில்லை அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் கோவிந்தன் இருக்கைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீ யார் பேசுவதற்கு என அதிமுக உறுப்பினர்கள் கேட்க அதற்கு கோவிந்தன், நீ யார் அதை சொல்வதற்கு என கேட்கவே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.

இதையடுத்து திமுக உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சீனிவாசன், மண்டி பிரகாஷ் ஆகியோர் இருதரப்பினரையும் தடுத்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

6 ஆயிரம் பேர் வருவார்கள்

39 வார்டுகளிலும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். 39 வார்டு குறைகளை தீர்க்கச் சொல்லி அமைச்சர் கூறி இருக்கிறார் என நகரமன்ற துணைத் தலைவர் ராஜாங்கம் கூறினார். அதற்கு அதிமுக உறுப்பினர்கள் உங்கள் கவுன்சிலரிடம்(கோவிந்தன்) இதை கூறுங்கள் என்றனர்.

வார்டு மக்களிடம் எங்களால் பதில் சொல்ல முடியவில்லை, நகராட்சி செய்யும் என பொய் சொல்லுகிறோம். இந்த 6 வார்டு கவுன்சிலர்களின்(அதிமுக) கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் ஒவ்வொரு வார்டிலிருந்தும் 1000 பேர் வீதம் 6000 பேர் வந்து நகராட்சியில் படுத்து விடுவார்கள் என அதிமுக கவுன்சிலர் டாக்டர் பழனி எச்சரிக்கை விடுத்தார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சி உள்ள பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதி, பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்தும் 1 முதல் 39 வார்டில் உள்ள தெருக்களில் உள்ள மின்விளக்குகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய ஏதுவாக தேவையான மின்சாதன பொருட்கள் சப்ளை செய்ய தோராய செலவினம் ரூ.7.35 லட்சத்திற்கு மன்ற அங்கிகாரம் அளிப்பது என்பன உள்ளிட்ட 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!