Homeசெய்திகள்பெட்ரோல் பங்கில் ரூ.40 லட்சம் மோசடி செய்தவருக்கு ஜெயில்

பெட்ரோல் பங்கில் ரூ.40 லட்சம் மோசடி செய்தவருக்கு ஜெயில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெட்ரோல் பங்கில் ரூ.40 லட்சத்தை மோசடி செய்தவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் ஆரணி தாலுகா முள்ளிப்பட்டிலும், குன்னத்தூரிலும் படைவீடு அம்மன் ஏஜென்சி என்ற பெயரில் கடந்த 2010ம் ஆண்டு முதல் பெட்ரோல் பங்க்கை நடத்தி வந்தார்.

பெட்ரோல் பங்கில் ரூ.40 லட்சம் மோசடி செய்தவருக்கு ஜெயில்
கார்த்திக்

இந்த 2 பெட்ரோல் பங்குகளிலும் திருவள்ளுர் மாவட்டம் திருவாளங்காடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

2010 ஆண்டு முதல் 2012 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மேற்கண்ட 2 பெட்ரோல் பங்குகளில் டீசல், பெட்ரோல் விற்பணை செய்த பணத்தை மேலாளர் கார்த்திக், பெட்ரோல் பங்கின் வங்கி கணக்கில் சரியாக செலுத்தாமல், ரூ. 40 லட்சத்தை மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.

இது குறித்து பெட்ரோல் பங்கின் உரிமையாளர் சேகர் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கார்த்திக் கைது செய்யப்பட்டார்.

இது சம்மந்தமான வழக்கு திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

See also  திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் கவியரசன், கார்த்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!