Homeசுகாதாரம்4 கிணறு, நீரூற்று-அய்யங்குளத்தின் சிறப்புகள்

4 கிணறு, நீரூற்று-அய்யங்குளத்தின் சிறப்புகள்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா தெப்பல் உற்சவம், அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறும் அய்யங்குளம் 80 வருடத்திற்கு பிறகு தூர்வாரப்படுகிறது.

4 கிணறு, நீரூற்று-அய்யங்குளத்தின் சிறப்புகள்

4 கிணறு, நீரூற்று-அய்யங்குளத்தின் சிறப்புகள்
                                                      அய்யங்குளத்தின் முந்தைய நிலை

10 அடிக்கு மேல் சேறும், சகதி

ஆண்டுக்கு 5 முறை அண்ணாமலையார் தீர்த்தவாரியும், கார்த்திகை தீபத்திருவிழா தெப்பல் உற்சவம் நடைபெறும் அய்யங்குளத்தில் 10 அடிக்கு மேல் சேறும், சகதியுமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. 2016 பிப்ரவரி மாதம் மஹோதய அமாவாசை தீர்த்தவாரியின் போது 4 பேர் இறந்த துயர சம்பவமும் நடந்தேறியது. மேலும் அய்யங்குளத்தை சுற்றி சுகாதார சீர்கேடும் நிலவி வந்தது. எனவே அய்யங்குளத்தை தூர் வார வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

தண்ணீர் வெளியேற்றம்

இதையடுத்து அய்யங்குளம், எ.வ.வேலுவின் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக அய்யங்குளத்திலுள்ள தண்ணீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

4 கிணறு, நீரூற்று-அய்யங்குளத்தின் சிறப்புகள்

இதே போல் கிரிவலப்பாதையில் உள்ள சிங்கமுக தீர்த்தமும் தூர்வாரப்படுகிறது.

புனித தீர்த்தங்களில் முக்கியமான அய்யங்குளத்தின் சிறப்புகள் வாசுதேவனின் கட்டுரையிலிருந்து…

80 வருடங்களுக்கு பிறகு திருவண்ணாமலை அய்யங்குளம் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் புகழ்பெற்ற தீர்த்தங்களில் அய்யங்குளம் முக்கியமானது .

இந்திர தீர்த்தம்

பரப்பளவில் நகரின் இரண்டாவது பெரிய குளம் இது. (தாமரைக்குளம் முதலாவது) இதனை இந்திர தீர்த்தம் என்று சொல்வார்கள் .

இந்த குளத்தை சுற்றி பழைய கோயில்கள் அமைந்திருக்கும் .இந்த குளத்தின் அருகே அருணகிரிநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.

4 கிணறு, நீரூற்று-அய்யங்குளத்தின் சிறப்புகள்

4 கிணறு, நீரூற்று-அய்யங்குளத்தின் சிறப்புகள்
                                                    அய்யங்குளத்தின் தற்போதைய நிலை

நந்தி இல்லா மண்டபம்

குளத்திற்கு உள்ளே நான்கு கிணறுகள் மற்றும் ஒரு ஊற்று, ஆறு பாறைகள் உண்டு. குளத்தின் மையத்தில் ஒரு அழகான மண்டபம் அமைந்திருக்கும். அந்த மண்டபத்தில் நந்தி அமைந்திருக்கும். தற்போது அந்த நந்தி இல்லை. குளத்தை சுற்றி அழகான நந்தவனங்கள் இருந்தது. அதுவும் தற்போது இல்லை.

தேரடி வீதி தரைமட்டத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் அய்யங்குளம் உள் தரைமட்டம் சுமார் 72 அடி சாய்வாக இருப்பதாக சொல்வார்கள்.

5 குளங்களை நிரப்பும் அருவி நீர்

மழைக்காலங்களில் மலை உச்சியில் இருந்து வழிந்தோடும் கந்தாஸ்ரமம் அருவி நீர் முதலில் சோமாவார குளத்தை நிரப்பும். பின்பு அங்கிருந்து பிரம்மதீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவாஞ்சி குளம் வழியாக அய்யங்குளம் வந்தடையும். பின்பு அங்கிருந்து கீழ்நாத்தூர் ஏரிக்கரையை சென்றடையும்.

இந்த அய்யங்குளத்தில் அருணாச்சலேசுவரர் தீர்த்தவாரி நடக்கும். கார்த்திகை தீபம் திருவிழாவில் அய்யங்குளம் தெப்பத் திருவிழா பிரசித்தி பெற்றது .

ஊற்றிலிருந்து தண்ணீர்

குளத்தில் உள்ள நீரை மூன்று பகுதியில் இருந்து மோட்டார் வைத்து வெளியேற்றி வருகிறார்கள். குளத்தின் உள்ளே ஊற்று பகுதியில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. குழாயில் இருந்து தண்ணீர் வருவது போன்று.

தண்ணீர் முழுவதும் வெளியேற்றி, உள்ளே இருக்கும் சேற்றை அப்புறப்படுத்தி, உள்ளே இருக்கும் நான்கு கிணற்றை சுத்தம் செய்தால் பாருங்கள், தண்ணீர் ஊற்று பெருக்கெடுத்து குளம் முழுவதும் தூய்மையான நீரால் நிரம்பி இருக்கும்.

நன்றி-வாசுதேவன்


Tiruvannamalai Agnimurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!