Homeஅரசியல்காங்கிரஸ் தலைவர் பதவி-செங்கம் குமார் நீக்கம் ஏன்?

காங்கிரஸ் தலைவர் பதவி-செங்கம் குமார் நீக்கம் ஏன்?

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக 9 வருடத்திற்கு மேல் பணியாற்றிய செங்கம் குமார் அப்பதவியிலிருந்து இன்று அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை பேகோபுரத் தெரு மலையேறும் பாதைக்கு அருகில் சுமார் 38 ஆயிரம் சதுர அடி இடத்தை 1960ல் அப்போதைய நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், மேல்சபை உறுப்பினராகவும் இருந்த அண்ணாமலை பிள்ளை என்பவர் தானமாக பெற்றுள்ளார். மேலும் 1960ல் அந்த இடம் நகர காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தம் என வில்லங்க சான்றிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த இடம் எந்தவித பத்திர பதிவு ஆதாரம் இல்லாமல் ஐக்கிய ஜனதா தளத்தின் பெயருக்கு பட்டா மாற்றப்பட்டது. இதை நீக்க கோரி நகர காங்கிரஸ் தலைவர் வெற்றிச் செல்வன் மனு அளித்ததின் பெயரில் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் இந்த இடத்தை கையகப்படுத்தும் போது ஜனதா தளத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதில் உடன்பாடு ஏற்பட்டது.

See also  அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக துணை முதல்வர்
காங்கிரஸ் தலைவர் பதவி-செங்கம் குமார் நீக்கம் ஏன்?
செங்கம் குமார்

பல வருடங்களாக மீட்கப்படாமல் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ரூ.50 கோடிக்கு மேல் மதிப்பு உடைய இடத்தை செங்கம் குமார், வெற்றிச் செல்வன் முயற்சியால் மீட்டதை சாதனையாக காங்கிரசார் கருதி வந்தனர். இதை கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

இந்த இடத்தை மீட்பதற்கு ரூ.90 லட்சம் வரை செலவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த பணத்தை செலவு செய்தவர்கள் அந்த இடத்தை அனுபவித்துக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அனுமதி பெறாமல் ஆவணங்களில் திருத்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இது பற்றி மாநில காங்கிரஸ் செயலாளரும், காமராஜரின் பேத்தியுமான கமலிகா, அந்த சொத்தில் கடை கோடி தொண்டன் முதல் தலைவர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் உரிமை உள்ள நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இடம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தை மீட்டு கட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து டெல்லியிலிருந்து வந்திருந்த காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கையை தலைமையிடம் தாக்கல் செய்தனர். இதையடுத்தே செங்கம் குமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

See also  எதிரொலி மணியன்¸ காளிதாசுக்கு தகுதியில்லையா?

காங்கிரஸ் தலைவர் பதவி-செங்கம் குமார் நீக்கம் ஏன்?

அதற்கான உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பிறப்பித்துள்ளார். மேலும் செங்கம் குமார், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதனின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


 

 Tiruvannamalai Agnimurasu


[email protected]

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!