Homeஅரசு அறிவிப்புகள்கல்வி கடன் பெற மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

கல்வி கடன் பெற மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழை, எளிய மாணவர்கள் கல்லூரியல் சேர பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள கலெக்டர் முருகேஷ், திருவண்ணாமலையில் 11ந் தேதி நடைபெறும் கல்வி கடன் மேளாவை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், வருகின்ற 11.08.2023 அன்று கலைஞர் கருணாநிதி அரசு கலைகல்லூரியில் கல்வி கடன் மேளா நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது,

மாவட்டத்தில் 31 கல்லூரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி என 31 கல்லூரிகள் உள்ளது. நமது மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கல்லூரியில் படிப்பு தொடர வேண்டுமென என்னிடம் கல்வி கடன் நிதியுதவி கேட்டு வருகின்றனர்.

கல்வி கடன் பெற மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

மாவட்ட ஆட்சியருக்கு அரசு வருடத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஓடுக்கீடு செய்கிறது. அதன் அடிப்படையில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உதவி செய்து வருகிறேன். கிராமப்பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் கல்லூரியல் சேர பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

See also  பால் பதப்படுத்துதல், கால்நடை தீவன உற்பத்திக்கு கடன்

இந்த இன்னல்களை போக்கிடும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு உதவிடும் வகையில் கல்விகடன் மேளா வருகின்ற 11.08.2023 அன்று கலைஞர் கருணாநிதி அரசு கலைகல்லூரியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முகாம் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

12 வங்கிகள் பங்கேற்பு

அந்தந்த கல்லூரி முதல்வர்கள் மாணவ, மாணவியர்களை சிரமம்மின்றி வந்து செல்ல பேருந்து வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மாணவ, மாணவியர்கள் https://www.vidyalakshmi.co.in என்ற இணைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்காக மாணவ, மாணவியர்களுக்கு தனி தனியே பதிவு செய்யும் மையம் அமைத்திட வேண்டும்.

அதே போல் கல்லூரி ஆசிரியர்கள் கல்விகடன் மேளா நடத்திட பொறுப்பு அலுவலர்களை நியமிக்கப்பட்டு, அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர்,கழிவறை வசதிகளை ஏற்பாடு செய்திட வேண்டும். இந்த கல்வி கடன் மேளாவில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீயஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, என 12 வங்கிகள் கலந்து கொள்ள உள்ளன.

See also  40 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிப்பு

இந்த அரிய வாய்ப்பினை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், மகளிர் திட்ட இயக்குநர், சையத் சுலைமான், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ச.கௌரி, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் அ.தனகீர்த்தி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் லோ. யோகலட்சுமி, நேர்முக உதவியாளர் வெற்றிவேல் மற்றும் துறை உயர் அலுவலர்கள், கல்லூரி சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!