Homeசெய்திகள்செல்போன் மூலம் பிட்- எஸ்.ஐ மனைவி வெளியேற்றம்

செல்போன் மூலம் பிட்- எஸ்.ஐ மனைவி வெளியேற்றம்

திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற எஸ்.ஐ தேர்வின் போது செல்போன் உதவியுடன் பிட் அடித்த எஸ்.ஐ மனைவி வெளியேற்றப்பட்டார்.

திருவண்ணாமலையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத பெண்களும், ஆண்களும் குவிந்தனர். அவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடத்தப்படுகிறது. இத் தேர்வினை திருவண்ணாமலை மாவட்டத்தில் 6401 பேர் எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 1471 பேர் பெண்கள். 6401 பேரில் 1149 பேர் தேர்வு எழுத வரவில்லை.

செல்போன் மூலம் பிட்- எஸ்.ஐ மனைவி வெளியேற்றம்

இவர்களுக்காக திருவண்ணாமலையில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி, சண்முகா தொழிற்சாலை கல்லூரி, எஸ்.ஆர்.ஜே.டி.எஸ் பள்ளி, கரண் கலை அறிவியல் கல்லூரி, கம்பன் கல்லூரி, சிஷ்யா மெட்ரிகுலேஷன் பள்ளி என 6 சென்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த 6 சென்டர்களிலும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத இன்று காலை முதலே ஆண்களும், பெண்களும் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டு சோதனைக்கு பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆல் டிக்கெட், பேனாவை தவிர வேறு பொருட்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த தேர்வுக்காக பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி சத்தியபிரியா, எஸ்.பி கார்த்திகேயன் மேற்பார்வையில் 615 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

செல்போன் மூலம் பிட்- எஸ்.ஐ மனைவி வெளியேற்றம்

காலை 10 மணி முதல் 12-30 மணி வரை பொது அறிவு(ஜென்ரல் நாலேஜ்), அறிவியல், வரலாறு, பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட தேர்வுகளும், மதியம் 3 மணிக்கு தொடங்கி 5:30 மணி வரை தகுதி தேர்வான தமிழ் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற்றது.

இந்நிலையில் கம்பன் கல்லூரியில் தேர்வு எழுதிய சென்னை ஏர்போர்ட்டில் எஸ்.ஐ யாக பணிபுரிபவரின் மனைவி ஒருவர் செல்போனை ஜாக்கெட்டுக்குள் மறைத்து தேர்வு மையத்திற்கு எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. வினாத்தாள் வழங்கிய பிறகு பாத்ரூம் செல்வதாக கூறி விட்டு அந்த பெண் சென்றாராம். அந்த தேர்வு அறையின் கண்காணிப்பாளர் பார்த்த போது வினாத்தாளையும் அந்த பெண் பாத்ரூமிற்கு எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

பிறகு பாத்ரூமில் இருந்து வந்த அந்த பெண்ணை சோதனையிட்டதில் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செல்போனை அதிகாரிகள் கைப்பற்றினர். பிறகு அந்த பெண்ணை தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றினர். வாட்ஸ் அப் மூலம் அவர் வினாத்தாளை வெளியில் அனுப்பினாரா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கல்லூரிக்கு வெளியில் உடந்தையாக இருந்து செயல்பட்டது யார்? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீதும், சரியாக சோதனையிடாமல் தேர்வு மையத்திற்குள் அனுப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அக்னிமுரசு யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பக்கத்தில் உள்ள பெல் ஐகான் ஐ கிளிக் செய்து புதிய வீடியோக்களை பெறுங்கள்.

 https://youtube.com/@AgniMurasu


 திருவண்ணாமலை செய்திகள்


 Tiruvannamalai Agnimurasu


 contact@agnimurasu.com

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!