திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயணராவ் காவிரி நீர் பிரச்சனையில் ரஜினிக்கு சம்மந்தமில்லை என்றும், கர்நாடகாவிலும் தண்ணீர் இல்லை என்றும் கூறினார்.
தாயார் உயிரோடு இல்லாததால் சிறுவயது முதலே ரஜினிகாந்த், தனது அண்ணன் சத்தியநாராயணராவ் அரவணைப்பில் வளர்ந்தவர். முக்கிய விஷயங்களில் அண்ணனின் ஆலோசனை படிதான் நடப்பார். கட்சி ஆரம்பிப்பதை கூட சத்தியநாராயணராவ்வின் சொன்னதற்காக ரஜினிகாந்த் கைவிட்டதாக தகவல் உலா வந்தது.
தம்பியை போல் அண்ணனும் அண்ணாமலையாரின் தீவிர பக்தர். சில வருடங்களுக்கு முன் ரஜினியின் பிறந்த நாளான்று அவர் நீடுழி வாழ சத்தியநாராயணராவ் திருவண்ணாமலையில் யாகம் வளர்த்து பூஜைகளை செய்தவர். தனது மகள் ஐஸ்வர்யா தயாரிக்கும் லால் சலாம் படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த், திருவண்ணாமலையில் தங்கியிருந்த போது அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
லால் சலாம் படம் வெளியாக உள்ள நிலையில் அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு இன்று மாலை வந்து தரிசனம் செய்தார். ஜெயிலர் படம் வெற்றி அடைந்ததற்கும், வெளியாக உள்ள லால் சலாம் படம் மிகப் பெரிய வெற்றி அடையவும் அவர் அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டார்.
சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த சத்தியநாராயணராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் கருணையால் படம் வெற்றி அடைந்துள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை. அவர் மீண்டும் அரசியலில் வர வாய்ப்பு இல்லை. ரஜினியின் நடிப்பில் ஞானவேல் இயக்கும் அடுத்த படம் 19ம் தேதி தொடங்குகிறது. ஜெயிலரை விட லால் சலாம் படம் மிகப் பெரிய வெற்றி அடையும். படம் நன்றாக வந்திருப்பதாக மகள்(ஐஸ்வர்யா) கூறியிருக்கிறார்.
வீடியோ…
நடிகர் சங்கத்துக்கு ரஜினிகாந்த் நிதி கொடுப்பார். எவ்வளவு கொடுப்பார் என்பது அவருக்கு தான் தெரியும். தமிழகத்தில் காவிரி நீர் பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது பற்றி அரசியல்வாதிகள் தான் பேசுவார்கள். ரஜினிகாந்த்துக்கு சம்பந்தமில்லை. கர்நாடகாவிலும் தண்ணீர் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.