Homeசெய்திகள்கல்குவாரி குட்டையில் இறந்து கிடந்த போலீஸ்காரர்

கல்குவாரி குட்டையில் இறந்து கிடந்த போலீஸ்காரர்

திருவண்ணாமலை அருகே போலீஸ்காரரின் உடல் கல்குவாரி குட்டையில் கண்டெடுக்கப்பட்டது. 25 நாட்களாக வேலைக்கு போகாமல் இருந்தவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 28) தந்தை பெயர் சம்பத். பிரசாந்த்துக்கு திருமணமாகி கவுரி சங்கர்(23) என்ற மனைவியும், 2 வயதில் அமுதன் என்ற மகனும் உள்ளனர்.

கல்குவாரி குட்டையில் இறந்து கிடந்த போலீஸ்காரர்
பிரசாந்த்

பிரசாந்த் 2017 காவல்துறையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். சென்னை ஆவடி வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கணவன்-மனைவிக்கிடையே கடந்த 2 வருடங்களாக குடும்ப பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாம்.

இந்நிலையில் கடந்த மாதம் 12ந் தேதி பணியிலிருந்து வந்த பிரசாந்த் அதன்பிறகு வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவருக்கு ஆப்சென்ட் போடப்பட்டது. தாய் வீட்டில் இருந்த தனது மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்த போது அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 3ந் தேதி இரவு வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் வேட்டவலம் நகரில் நக்கீரன் என்பவரது கல்குவாரி குட்டை கரையில் செல்போன் மற்றும் செருப்பு இருப்பதை சிலர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

கல்குவாரி குட்டையில் இறந்து கிடந்த போலீஸ்காரர்

இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் நீண்ட நேரம் குட்டையில் மூழ்கி தேடி ஆண் உடல் ஒன்றை கண்டுபிடித்தனர். குட்டையில் பிணமாக மூழ்கி கிடந்தவர் போலீஸ்காரர் பிரசாந்த் என்பது தெரியவந்தது. போலீஸ்காரரின் உடல் குட்டையில் கண்டெடுக்கப்பட்டது வேட்டவலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!