Homeஅரசியல்1லட்சம் வீடுகளுக்கு குக்கர்-துவக்கி வைத்தார் அமைச்சர்

1லட்சம் வீடுகளுக்கு குக்கர்-துவக்கி வைத்தார் அமைச்சர்

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சம் வீடுகளுக்கு குக்கர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார். தலையாம்பள்ளத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மூதாட்டி ஒருவர் காயம் அடைந்தார்.

பேரறிஞர் அண்ணா 115வது பிறந்தநாள் விழா, கலைஞர் நூற்றாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் தோறும் குக்கர் வழங்கப்பட உள்ளது.

3 லிட்டர் குக்கர் இலவசம்

கீழ்செட்டிப்பட்டு, தலையாம்பள்ளம், சேர்ப்பாப்பட்டு, தலையாம்பள்ளம் ஆகிய கிராமங்களில் 16ந் தேதி நடைபெற்ற விழாக்களில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு கிராம மக்களுக்கு 3 லிட்டர் குக்கரை வழங்கினார். அவர் பேசுகையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வழங்கியதற்காக பெண்கள், தங்களது வீடுகளில் கோலம் போட்டு வாழ்த்து தெரிவித்து எனக்கு வாட்ஸ்அப்பில் நன்றியும் தெரிவித்துள்ளனர் என்றார்.

கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் நடந்த விழாவுக்கு ஒன்றிய செயலாளர் மெய்யூர் ந.சந்திரன், சேர்ப்பாப்பட்டு கிராமத்தில் நடந்த விழாவுக்கு ஒன்றிய செயலாளர் பி.கோவிந்தன், தலையாம்பள்ளம் கிராமத்தில் நடந்த விழாவுக்கு த.ரமணன் ஆகியோர் தலைமை தாங்கினார். மாநில மருத்துவரணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் க.பரிமளாகலையரசன் ஆகியோர் முன்னிலை வகிக்க திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி அனைவரையும் வரவேற்றார்.

See also  ஒரு பைசா கூட பறிமுதல் செய்யப்படவில்லை-எ.வ.வேலு விளக்கம்

விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் எம்.ஆர்.கலைமணி, நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் து.சக்கரவர்த்தி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஜெ.மெய்கண்டன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோ.ராஜசேகர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் இரா.பாஸ்கரன், அவைத் தலைவர் ஆர்.வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி இரா.தனகோட்டி, சேர்ப்பாப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் தீபா ராதாகிருஷ்ணன், தலையாம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆண்டாள் சீத்தாராமன், நாச்சானந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பி.எம்.நடராஜன், தச்சம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் லலிதா செல்வராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய திமுக நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கட்சி பாகுபடி இன்றி குக்கர்

கிராமங்களில் திமுகவினர் வீடுகள் மட்டுமன்றி மற்ற கட்சியினரின் வீடுகளுக்கும் குக்கர் போய் சேர வேண்டும் என மாவட்ட திமுக அலுவலகத்தின் உத்தரவாம். திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்கள் எனில் ஒரு வீட்டில் அதிகப்பட்சம் 3 முதல் 5 வாக்காளர்கள் இருப்பார்கள் என்பதால் ஒரு வீட்டுக்கு ஒரு குக்கர் என கணக்கெடுத்து வழங்கப்படுகிறது. இதன்படி 1 லட்சம் வீடுகளுக்கு குக்கர் வழங்கப்பட உள்ளது

See also  தி.மு.க வேட்பாளரின் மனுவை நிராகரிக்க கேட்ட பா.ஜ.க

தலையாம்பள்ளம் கிராமத்தில் வீட்டுக்கு ஒருவருக்கு டோக்கன் கொடுத்திருந்தாலும் குக்கரை பெற பெண்கள் முண்டியடித்தனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது மூதாட்டி ஒருவர் கீழே விழுந்ததில் அவரது காலில் அடிபட்டது. இருந்தாலும் அவர் விடாமல் போராடி குக்கரை பெற்றுச் சென்றார். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும், திமுக நிர்வாகிகளும் பாடாதபாடு பட்டனர்.

மற்ற ஊர்களுக்கு குக்கர்களை அமைச்சரின் மகன் எ.வ.வே.கம்பன் வழங்க உள்ளார்.

பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000ம், அடுத்து வீடு தோறும் குக்கர் வழங்கும் திட்டம் ஆகியவை நாடாளுமன்ற தேர்தலுக்கு வலு சேர்க்கும் என்கின்றனர் உடன்பிறப்புகள். திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் குக்கர் வழங்கும் திட்டத்தை நிறுத்தி விடாமல் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மற்ற 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!