Homeசெய்திகள்நடிகை கவுதமி புகார்-அன்னசத்திர நிர்வாகி மீது வழக்கு

நடிகை கவுதமி புகார்-அன்னசத்திர நிர்வாகி மீது வழக்கு

திருவண்ணாமலை ஐங்குணம் கிராமத்தில் 4 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து விட்டதாக நடிகை கவுதமி கொடுத்திருந்த புகாரின் பேரில் அன்னசத்திர நிர்வாகி அழகப்பன் மீதும், அவரது மனைவி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகை கவுதமி புகார்-அன்னசத்திர நிர்வாகி மீது வழக்கு

நடிகை கவுதமி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவராகவும் பணியாற்றியிருக்கிறார்.பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட சமூப்பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்துள்ளார். திரைப்பட தணிக்கை துறையில் பொறுப்பு வகித்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கவுதமி, தனது சொத்துக்களுக்கு பவர் ஏஜென்டாக சினிமா பைனான்சியர் அழகப்பனை நியமித்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை அருகே தனது நிலத்தை ரூ.11 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதை மறைத்து வெறும் ரூ.4 கோடி மட்டும் தனக்கு தரப்பட்டது கவுதமிக்கு தெரியவந்தது. இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

நடிகை கவுதமி புகார்-அன்னசத்திர நிர்வாகி மீது வழக்கு

இந்த மோசடியால் அதிர்ச்சி அடைந்த கவுதமி அழகப்பன் மீது சந்தேகம் கொண்டு தனது சொத்து விவரங்களை சரிபார்த்ததில் திருவண்ணாமலை அடுத்த ஐங்குணத்தில் தனது 4 ஏக்கர் நிலத்திலும் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. அந்த நிலத்தின் உரிமையாளரான கவுதமி பெயரோடு அழகப்பனின் மனைவியையும் சேர்த்திருப்பதை கவுதமி கண்டுபிடித்து திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவில் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் புகார் அளித்தார்.

See also  விவசாயி கொலை-ரூ.20 லட்சம் கேட்ட 3 பேர் கைது

இந்நிலையில் பாஜகவிலிருந்து விலகுவதாக நடிகை கவுதமி இன்று அறிவித்திருந்த நிலையில் 40 நாட்களுக்கு முன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்திருந்த புகார் தூசு தட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள் மற்றும் மகன், மருமகள் உள்பட 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நடிகை கவுதமி புகார்-அன்னசத்திர நிர்வாகி மீது வழக்கு
அழகப்பன்

இதையடுத்து நடிகை கவுதமி திருவண்ணாமலையில் கொடுத்திருந்த புகாரின் நிலை குறித்து விசாரித்ததில் அந்த புகாரில் அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள் ஆகியோர் மீது இம்மாத தொடக்கத்தில் போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அழகப்பன் திருவண்ணாமலை தேரடித் தெருவில் உள்ள அன்னசத்திரத்தின் முக்கிய நிர்வாகியாக உள்ளார்.

சென்னை மற்றும் திருவண்ணாமலையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை தொடர்ந்து அழகப்பன், அவரது குடும்பத்தினரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!