Homeஆன்மீகம்முன்கூட்டியே மூடப்பட்ட அண்ணாமலையார் கோயில்-பக்தர்கள் ஏமாற்றம்

முன்கூட்டியே மூடப்பட்ட அண்ணாமலையார் கோயில்-பக்தர்கள் ஏமாற்றம்

திருவண்ணாமலையில் இன்று ஐப்பசி மாத பவுர்ணமியை யொட்டி அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலம் செல்லவும் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகரித்ததால் கோயில் முன்கூட்டியே மூடப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

முன்கூட்டியே மூடப்பட்ட அண்ணாமலையார் கோயில்-பக்தர்கள் ஏமாற்றம்

16 கலைகளுடன் முழுப்பொலிவுடன் சந்திரன் காட்சி

சந்திரன் 27 மனைவியர்களிடமும் பாரபட்சமாக நடந்து கொள்வதாக அசுவினி என்பவள் தந்தையாகிய தட்சனிடம் முறையிட, சினமுற்ற தட்சன் சாபத்தினால், சந்திரன் தன் கலைகளை இழந்து அழிந்து கொண்டிருந்தான். சந்திரன் சிவனை வழிபட்டதனால் இறைவன் திங்களுரில் பிறை நிலவை தன்சிரசில் அணிந்து அவனை காப்பாற்றினார்.

ஐப்பசி பவுர்ணமி அன்று அசுவினிக்காக சந்திரன் அமிர்த கலையாகிய 16 கலைகளுடன் முழுப்பொலிவுடன் காட்சியளிக்கிறான் என்பது புராணம். இந்த நாளில் சந்திரன் பூமியை சுற்றும் நீள்வட்டப்பாதையில் பூமிக்கு மிக அருகாமையில் வருகிறது என்பது அறிவியல் உண்மை.

அன்னம் என்பது பஞ்சபூதங்ளை தன்னுள் அடக்கியது. அதாவது லிங்க வடிவத்திலுள்ள அரிசி, நிலத்தில் விளைந்தது. ஆகாயத்தில் உலவும் காற்றின் உதவியால் எரியும் தீயில், அரிசியானது நீரில் வெந்து அன்னமாகிறது.

முன்கூட்டியே மூடப்பட்ட அண்ணாமலையார் கோயில்-பக்தர்கள் ஏமாற்றம்

உடல் பிணிகள் ஓடிப்போகும், திருமண தடை விலகும்

இந்த அன்னத்தால் பூதநாயகனாகிய பஞ்சபூதங்களை தன்னுள் அடக்கிய சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, இந்த ஐப்பசி பூரண சந்திர நன்னாளில் வழிபாடு செய்யும்போது, உடல் பிணிகள் ஓடிப்போகின்றன. சகல சௌபாக்கியங்களும் வந்து சேர்கின்றன. அபிஷேக அன்னத்தை உட்கொண்டால் திருமண தடை விலகும். குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

இன்று அன்னாபிஷேகத்தை யொட்டியும், பவுர்ணமியை யொட்டியும் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய திருவண்ணாமலையில் காலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். எப்போதும் இல்லாத அளவு காந்தி சிலையை தாண்டி கியூ வரிசை நீண்டது. அதே போல் அண்ணாமலையார் கோயில் நான்கு கோபுர வீதிகளிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. 6 மணி நேரம் காத்திருத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

முன்கூட்டியே மூடப்பட்ட அண்ணாமலையார் கோயில்-பக்தர்கள் ஏமாற்றம்

முன்கூட்டியே மூடப்பட்ட அண்ணாமலையார் கோயில்-பக்தர்கள் ஏமாற்றம்

முன்கூட்டியே மூடப்பட்ட அண்ணாமலையார் கோயில்-பக்தர்கள் ஏமாற்றம்

அன்னாபிஷேகத்தை யொட்டி மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை அண்ணாமலையார் கோயிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்குள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் தரிசனம் செய்ய பகல் 3 மணி வரை ஆகும்.என்பதால் பகல் 12 மணிக்கே கோயில் கதவுகள் அடைக்கப்பட்டது.

அன்னாபிஷேகத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் மடப்பள்ளியில் தயாரான 100 கிலோ சாதத்தை கொண்டு கருவறையில் இருக்கும் அண்ணாமலையாரின் திருமேனி முழுவதும் அலங்கரிக்கப்பட்டது. இதே போல் கல்யாண சுந்தரேஸ்வரரும் 25 கிலோ சாதத்தால் அலங்கரிக்கப்பட்டார். மகா தீபாராதனை நடைபெற்ற பிறகு அன்னம் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

முன்கூட்டியே மூடப்பட்ட அண்ணாமலையார் கோயில்-பக்தர்கள் ஏமாற்றம்

முன்கூட்டியே மூடப்பட்ட அண்ணாமலையார் கோயில்-பக்தர்கள் ஏமாற்றம்

இரவு 8 மணிக்கும் மூடப்பட்டது

அன்னாபிஷேகம் முடிந்து மாலை 6 மணிக்கு கோயில் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குள் சென்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மீண்டும் கோயில் 8 மணிக்கு மூடப்பட்டது. 2 மணி நேரம் மட்டுமே கோயில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


அன்னமும் பரமேஸ்வரனும்,பசிப்பிணி போக்கும் பெருமான்

என எல்லோருக்கும் உண்மையான ஒரே தந்தை தாயாய் உள்ள பரம சிவன் உணவு அளித்து எல்லா உயிரினங்களையும் பாதுகாத்து அருளிய திருத்தலங்கள் பலப் பல.
நெல்லையப்பர் திருநெல்வேலியில் அடியார் உலர்த்திய நெல் மழையால் நனையாமல் வெய்யில் வேலியிட்டுப் பாதுகாத்தார்.

திருக்குவளை ( திருக் கோளிலி) கோளிலிப் பெருமான் குண்டையூர் கிழாருக்கு ஊர் முழுவதும் நெல் மலைகளை அருளிச் செய்தார்.

திருச் சோற்றுத் துறைத் தொலையாச் செல்வர் அந்தணத் தம்பதியருக்கு அட்சயப் பாத்திரம் அருளினார்.

காசியில் பூஜை செய்த பராசக்திக்கு சுயம்பு சோதிலிங்க விஸ்வநாதர் அட்சயப் பாத்திரம் அருளி அன்னபூரணி ஆக்கினார்.

சிதம்பரம் ஆகாய நாதர் உபமன்னியு முனி பாலகருக்குப் பாற்கடலை அனுப்பினார்.

மதுரை சுயம்பு லிங்கச் சொக்கநாதர் அன்னக் குழியும் வைகை நதியும் உண்டாக்கி அருளி குண்டோதரனது தீராத பசியும் தாகமும் தீர்த்தார்.

தீர்த்த நாயகன் தண்ணீர்ப் பந்தல் அமைத்துப் பாண்டியன் சேனைகளது தாகம் தீர்த்தார்.

மதுரேசர் ழூகல் யானைக்கு உயிர் கொடுத்துக் கரும்பு ஊட்டினார்.

தாய்ப் பன்றியாக வந்து பன்னிரண்டு குட்டிகளுக்குப் பாலூட்டி மீண்டும் மனிதர்களாக்கினார்.

முன்கூட்டியே மூடப்பட்ட அண்ணாமலையார் கோயில்-பக்தர்கள் ஏமாற்றம்

டியார்க்கு நல்லான் என்ற அன்பருக்காக சுந்தரேசர் எடுக்கக் எடுக்கக் குறையாத அட்சய உலவாக் கோட்டை அரிசி அருளினார்.

சீர்காழி பிரம்ம புரீசர் தோடு அணியும் அர்த நாரி இருபால் ஈசராய் அலிப் பெருமானாய் நந்தி மேல் வந்து அருளித் திருஞான சம்பந்தருக்குத் தங்கக் கிண்ணத்தில் பசும்பால் சாதம் ஊட்டி அருளினார்.

பசிப்பிணி போக்கும் பெருமான் திருப் பைஞ்ஞீலியில் திருநாவுக்கரசருக்கு உணவும் நீரும் அளித்துப் பசியும் தாகமும் போக்கினார்.

திருக்குருகாவூர் வெள்ளடையிலும் (திருக்கடாவூர்) திருக்கச்சூர் ஆலக் கோயிலிலும் சுந்தரருக்குப் பராபரன் உணவும் நீரும் அளித்துப் பசியும் தாகமும் தீர்த்தார்.

தாயின் சிறந்த தயாவான தத்துவனே (திருவாசகம்)
பெற்று இருந்த தாய் அவளின் நல்லாய் நீயே (அப்பர்)

என மெய்யான பக்தியுடன் வழிபடும் தொண்டு செய்யும் அடியார்களுக்குப் பெற்ற தாய்க்கு மேலாகச் சிறந்த தாயான ஈசன் புரிந்த அருள் கணக்கற்றவை.

தகவல்-சிவப்பிரியா
படங்கள்-பார்த்திபன்

Link: TIRUVANNAMALAI AGNIMURASU

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!