லியோ படம் திரையிடப்படும் திரையரங்குகள் விதி மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் முருகேஷ் எச்சரித்துள்ளார்.
இது சம்பந்தமாக திருவண்ணாமலை கலெக்டர் பா. முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திரையரங்குகளில் “லியோ” திரைப்படத்திற்கு கூடுதலாக ஒரு சிறப்புக்காட்சி 19.10.2023 முதல் 24.10.2023 வரை (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) திரையிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்படி திரைப்படம் தொடக்க காட்சி காலை 09.00 மணிக்கும், கடைசி காட்சியாக நள்ளிரவு 01.30 மணியளவில் முடிவடையும் வகையில் திரையிடுமாறும் அரசுக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் “லியோ” திரைப்படம் வெளியிடும் நிகழ்வின் போது முறையான போக்குவரத்து மற்றும் பார்க்கிங் ஏற்பாடுகளை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் விதிமீறல்கள் ஏதும் இருப்பின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மேற்குறிப்பிட்ட இனங்கள் குறித்து புகார்கள் இருப்பின் பொதுமக்கள் தொடர்புடைய செய்யார் சார் ஆட்சியர் (தொலைபேசி எண் திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் (தொலைபேசி எண் – 9445000420), ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் (தொலைபேசி எண் 8072912122) ஆகியோர்களிடம் புகார்
தெரிவிக்கலாம். 9445000419),
திரையரங்குகளில் பின்வரும் நிபந்தனைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
1. திரையரங்குகளில் கூடுதல் காட்சி நடத்தப்படும் நேர்வில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல் வெளியேறுதல் வாகனம்
நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல்துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.
3. மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து
கொள்ள வேண்டும்.
4. திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.