Homeஆன்மீகம்பரணி, மகாதீப அனுமதி சீட்டு பெற நிபந்தனைகள்

பரணி, மகாதீப அனுமதி சீட்டு பெற நிபந்தனைகள்

பரணி, மகாதீப அனுமதி சீட்டு பெற நிபந்தனைகள்
கலெக்டர் முருகேஷ் அறிவிப்பு- தீபதிருவிழா விவரங்களை அறிந்து கொள்ள இலவச எண் அறிவிப்பு

திருவண்ணாமலை பரணி, மகாதீப அனுமதி சீட்டு பெற நிபந்தனைகளை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ளார். மேலும் தீபதிருவிழா விவரங்களை அறிந்து கொள்ள இலவச எண்ணையும் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் நிறைவாக, வரும் 26ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோயில் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

பரணி தீபம் மற்றும் மகா தீபம் காண இணைய வழி அனுமதி சீட்டுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளது.

பரணி, மகாதீப அனுமதி சீட்டு பெற நிபந்தனைகள்

இது குறித்து கலெக்டர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத்திருவிழா நாளான 26.11.2023 அன்று காலை 4.00 மணிக்கு பரணி தீபம் தரிசனம் காண ரூ.500 கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், அன்று மாலை 6.00 மணிக்கு மகா தீபம் தரிசனம் காண ரூ.600 கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள் மற்றும் ரூ.500 கட்டணத்தில் 1000 அனுமதி சீட்டுகளும் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதள வழியாக பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 24.11.2023 அன்று காலை 10.00 மணி முதல் வெளியிடப்பட உள்ளது.

  • கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை, கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை.
  • ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.
  • கட்டணச்சீட்டு பதிவு செய்தவுடன், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் எண் OTP குறுஞ்செய்தி பதிவு செய்தவரின் கைபேசி எண்ணிற்கு வரும்.
  • கட்டணச்சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  • ஆன்லைன் மூலம் டிக்கட் பதிவிறக்கம் செய்யப்பட்டு பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 26.11.2023 அன்று அதிகாலை
    02.00 மணி முதல் 03.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • ஆன்லைன் மூலம் டிக்கட் பதிவிறக்கம் செய்யப்பட்டு மகா தீபம் தரிசனத்திற்கு வருகைதரும் பக்தர்கள் 26.11.2023 அன்று மாலை 02.00 முதல் 03.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • மேற்கண்ட இரண்டு தீப நிகழ்வுகளை காணவரும் பக்தர்கள் அசல் கட்டணச்சீட்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு இத்திருக்கோயில் கிழக்கு ராஜ கோபுரம் (திட்டி வாயில்) வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
  • குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தர தவறும் சேவார்த்திகளை கண்டிப்பாக அனுமதிக்க இயலாது.
  • Online வழியாக கட்டணச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து வருகைதர இருக்கும் சேவார்த்திகள் மேலே குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி திருக்கோயிலுக்கு ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பிற ஏற்பாடுகள்

பக்தர்கள் தீபத்திருவிழா பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக Toll Free No.1800 425 3657 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருக்கோயில்களில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள QR Code பலகையினை பயன்படுத்தி பக்தர்கள் நன்கொடைகளை Online மூலம் செலுத்தி அருள்மிகு அண்ணாமலையார் அருள்பெற வேண்டுகிறோம்.
மகா தீபத்திற்கு பிரார்த்தனை நெய் குடத்திற்கான காணிக்கை கட்டணத்தை இராஜகோபுரம் (கிழக்கு கோபுரம்) அருகில் உள்ள திட்டிவாயில் பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் திருமஞ்சன கோபுரம் (தெற்கு கோபுரம்) நுழைவு வாயில் இடங்களில் காணிக்கை ஆகிய நெய்குடத்திற்கான கட்டணச்சீட்டுகள் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
26.11.2023 அன்று பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் பெரிய திரை வாயிலாக திருக்கோயில் வளாகத்திற்குள் 4 இடங்கள், திருக்கோயில் கோபுரங்கள் முன்பு, தற்காலிக பேருந்து நிலையங்கள், நகரின் முக்கிய இடங்களில் 20 இடங்கள் என மொத்தம் 24 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
திருக்கோயில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் இத்திருக்கோயிலின் https://youtube.com/@arunachaleswarar என்ற மூலம் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பக்தர்கள் நேரலையில் கண்டு மகிழலாம்.

இவ்வாறு கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

See also  திருவண்ணாமலை கோயிலில் மன்மதனை எரித்தார் சிவபெருமான்

Link: http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!