Homeஅரசு அறிவிப்புகள்எங்கிருந்து, எந்த நேரத்தில் சிறப்பு ரயில் இயக்கம்?

எங்கிருந்து, எந்த நேரத்தில் சிறப்பு ரயில் இயக்கம்?

எங்கிருந்து, எந்த நேரத்தில் சிறப்பு ரயில் இயக்கம்?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு 3 நாட்கள் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்த முழு விவரம்

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தேரோட்டம் நிறைவடைந்த நிலையில் வரும் 26ந் தேதி மகாதீப விழா நடைபெறவுள்ளது. மகாதீபத்தை தரிசிக்க 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பக்தர்களின் வசதிக்காக நாளை 25ந் தேதி முதல் 27ந் தேதிவரை தொடர்ந்து 3 நாட்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் 2700 கார்த்திகை தீப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதற்காக திருவண்ணாமலையில் 9 தற்காலிக மற்றும் 4 கூடுதல் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் தென்னக ரயில்வேவும் திருவண்ணாமலைக்கு 2 நாட்கள் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. சிறப்பு ரயில் எங்கிருந்து, எந்த நேரத்தில் புறப்படும் என்ற விவரத்தை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு,
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, கீழ்க்கண்ட சிறப்பு ரயில்கள் பக்தர்களின் நெரிசலை குறைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.

25,26ந் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்

ரயில் எண். 06127 முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரயில் இரவு 9-50 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு பின்னிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

குறிப்பு: மேற்கண்ட ரயில் சேவையானது ரயில் எண். 06033 சென்னை கடற்கரை – வேலூர் நீட்டிப்பு ஆகும். மேற்கண்ட நாட்களில். பயணிகள் சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலைக்கு நேரடியாக டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம்.

ரயில் எண். 06131 விழுப்புரம் – திருவண்ணாமலை முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரயில் விழுப்புரத்தில் இருந்து இரவு 9-50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடையும்.

குறிப்பு: மேற்கண்ட ரயில் சேவையானது ரயில் எண். 06027 தாம்பரம் – விழுப்புரம் இடையே நீட்டிப்பு ஆகும். மேற்கண்ட நாட்களில் பயணிகள் தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நேரடியாக டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம்.

ரயில் எண். 06119 திருப்பாதிரிப்புலியூர் – வேலூர் கண்டோன்மென்ட் முன்பதிவு செய்யப்படாத டெமு சிறப்பு ரயில் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு பின்னிரவு 12.40 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டை சென்றடையும்.

குறிப்பு: மேற்கண்ட ரயில் சேவையானது ரயில் எண். 06889 திருச்சிராப்பள்ளி சந்திப்பின் நீட்டிப்பாகும். மேற்கண்ட நாட்களில் பயணிகள் திருச்சிராப்பள்ளியிலிருந்து வேலூருக்கு நேரடியாக டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம்.

எங்கிருந்து, எந்த நேரத்தில் சிறப்பு ரயில் இயக்கம்?

26, 27ந் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்

ரயில் எண். 06128 முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரயில். திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 03.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட்டை அதிகாலை 05.35 மணிக்கு சென்று அடையும்.

குறிப்பு: மேற்கண்ட ரயில் சேவையானது ரயில் எண். 06034 வேலூர் கண்டோன்மென்ட- சென்னை கடற்கரை நீட்டிப்பாகும். மேற்கண்ட நாட்களில் பயணிகள் திருவண்ணாமலையிலிருந்து சென்னை கடற்கரை வரை நேரடியாக டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம்.

ரயில் எண். 06129 விழுப்புரம் – திருவண்ணாமலை முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயில் காலை 09.15 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு முற்பகல் 11.00 மணிக்கு வந்தடையும்.

குறிப்பு: மேற்கண்ட ரயில் சேவையானது ரயில் எண். 06690 மயிலாடுதுறை – விழுப்புரம் நீட்டிப்பாகும். மேற்கண்ட நாட்களில் பயணிகள் மயிலாடுதுறையிலிருந்து திருவண்ணாமலைக்கு நேரடியாக டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம்.

ரயில் எண். 06130 திருவண்ணாமலை – விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயில் திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு பகல் 02.15 மணிக்கு சென்று அடையும்.

குறிப்பு: மேற்கண்ட ரயில் சேவையானது ரயில் எண். 06691 விழுப்புரம் சந்திப்பு -மயிலாடுதுறை நீட்டிப்பாகும். மேற்கண்ட நாட்களில் பயணிகள் திருவண்ணாமலையிலிருந்து மயிலாடுதுறைக்கு நேரடியாக டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம்.

எங்கிருந்து, எந்த நேரத்தில் சிறப்பு ரயில் இயக்கம்?

ரயில் எண். 06132 திருவண்ணாமலை – விழுப்புரம் முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 03.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு அதிகாலை 05.00 மணிக்கு சென்று அடையும்.

குறிப்பு: மேற்கண்ட ரயில் சேவையானது ரயில் எண். 06028 விழுப்புரம் சந்திப்பு – தாம்பரம் நீட்டிப்பு ஆகும். மேற்கண்ட நாட்களில் பயணிகள் திருவண்ணாமலையிலிருந்து தாம்பரத்திற்கு நேரடியாக டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம்.

ரயில் எண். 06120 வேலூர் கண்டோன்மென்ட் – திருப்பதிரிபுலியூர் முன்பதிவு செய்யப்படாத டெமு சிறப்பு ரயில் வேலூரில் இருந்து அதிகாலை 0.1.30 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூருக்கு அதிகாலை 05.40 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் ஆரணி சாலை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட வழக்கமான நிறுத்தங்களில் நிறுத்தப்படும்.

குறிப்பு: மேற்கண்ட ரயில் சேவையானது ரயில் எண். 06890 திருப்பாதிரிப்புலியூர் – திருச்சிராப்பள்ளி நீட்டிப்பு ஆகும். மேற்கண்ட நாட்களில் பயணிகள் வேலூர் கண்டோன்மென்ட்டிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு நேரடியாக டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம்.


Link:http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!