சென்னை உள்பட 8 ஊரிலிருந்து முன்பதிவு செய்யலாம்
திருவண்ணாமலை கார்த்திகை தீப சிறப்பு பேருந்தில் பக்தர்களுக்கு வசதி- அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு- அதிகப்பட்சமாக சென்னைக்கு 1767 நடைகள் இயக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் மாலை 6 மணியளவில் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
மகாதீபத்தை காண 30 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் 26.11.2023 அன்று திருக்கார்த்திகை தீபமும், அதனை தொடர்ந்து பௌர்ணமி கிரிவலமும் நடைபெற உள்ளது தீபத்திருவிழாவினை காண தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக விழுப்புரம் மற்றும் சகோதர போக்குரத்துக் கழகங்கள் மூலம் 25.11.2023 முதல் 27.11.2023 வரை 2700 பேருந்துகள் மூலம் 6832 நடைகள் இயக்கப்படவுள்ளது.
மேலும் சென்னை, பெங்களுர், சேலம், ஓசூர், மதுரை, கோயம்புதூர், கும்பகோணம், திருச்சி ஆகிய பகுதிகளிலிருந்து முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள் விவரம்
இவ்வாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் (விழுப்புரம்) திருவண்ணாமலை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ள போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பயணிகள் https://www.tnstc.in/home.html என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.