Homeஆன்மீகம்ராஜகோபுரம் மூடப்பட்டது-இருளில் பக்தர்கள் தவிப்பு

ராஜகோபுரம் மூடப்பட்டது-இருளில் பக்தர்கள் தவிப்பு

ராஜகோபுரம் மூடப்பட்டது-இருளில் பக்தர்கள் தவிப்பு
இரவு 7-30 மணிக்கே விளக்குகளை அணைத்த அண்ணாமலையார் கோயில் நிர்வாகம்

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் இரவு 7-30 மணிக்கே மூடப்பட்டு மின்விளக்குகள் எரிய விடாமல் நிறுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் கோபுர வாசலில் இருட்டில் தவித்தனர்.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க அண்ணாமலையார் கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இத் தலம் நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கி வருகிறது. இங்கு கோயிலுக்கு பின்னால் அமைந்திருக்கும் மலையை சிவனாக கருதி ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும், தீபத்திருவிழாவிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை வலம் வருகின்றனர்.

மேலும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இது மட்டுமன்றி ஆந்திரா, தெலுங்கா பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இதனால் அண்ணாமலையார் கோயிலின் வருமானமும் உயர்ந்திருக்கிறது. அண்ணாமலையார் கோயில் வரலாற்றில் இல்லாத அளவு இந்த மாதம் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியை நெருங்கியிருக்கிறது.

ராஜகோபுரம் மூடப்பட்டது-இருளில் பக்தர்கள் தவிப்பு

இந்த வருமானத்தை தந்த பக்தர்களுக்கு அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தேவையான வசதிகளை செய்து தர தவறி விட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசிக்க 7 மணி நேரம் கால் கடுக்க காத்திருக்கிருக்கும் நிலை உள்ளது. நேற்று சனிக்கிழமை முதல் நாளை திங்கட்கிழமை வரையும் விடுமுறை நாள் என்பதால் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

See also  அண்ணாமலையார் கோயிலில் 2 மணி நேரத்தில் தரிசனம்?

இன்று ஞாயிற்றுகிழமை இது மேலும் அதிகரித்தது. இதனால் பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பல பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசிக்க முடியாமல் திரும்பி சென்ற நிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருவண்ணாமலை கோயிலில் ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ், காலை 11 மணிக்கு வந்த பக்தர்கள் சிலர் மாலை 6 ஆகியும் தரிசனம் செய்ய முடியாத நிலை இருப்பதை நேரில் கண்டறிந்தார். பிறகு பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு குறிப்பாக 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுரைகளை வழங்கினார். மேலும் திருப்பதி போல் திருவண்ணாமலை மாற்றப்படும் என அமைச்சர்களும் தெரிவித்தனர். ஆனால் இது எதுவுமே நடைபெறவில்லை.

பக்தர்களிடம் காணிக்கை தொகை பெற எங்கெங்கு உண்டில்களை வைப்பது, வருமானத்தை பெருக்க கடைகளை எப்படி கட்டுவது? போன்றவற்றில்தான் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தின் கவனம் சென்றது. இதன் காரணமாக திருவண்ணாமலையை நாடி வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.

See also  தீப திருவிழா:கலெக்டர் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு

ராஜகோபுரம் மூடப்பட்டது-இருளில் பக்தர்கள் தவிப்பு

ராஜகோபுரம் மூடப்பட்டது-இருளில் பக்தர்கள் தவிப்பு

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள், பவுர்ணமி நாட்களில் கோயில் இரவு 7-30 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதுபற்றி முறையான அறிவிப்பு செய்யப்படாததால் பக்தர்கள் கோபுர வாசல்களில் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்லுகின்றனர். இன்றும் இரவு 7-30 மணிக்கு ராஜகோபுரம் அடைக்கப்பட்டதுடன் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த விளக்குகள் அனைத்தும் எரியவிடாமல் நிறுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் ராஜகோபுரம் முன்பு இருட்டில் தரையில் அமர்ந்து தரினத்திற்காக காத்திருந்தனர்.

போராட்டம் நடத்தணுமா?

இந்நிலையில் திருவண்ணாமலை முழுவதும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போல் தெருக்கள் முழுவதும் வேலி அமைத்து அவர்களின் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே செல்ல இயலவில்லை. கார்கள் வருகிறது என்றால் ஊர் எல்லையில் நிறுத்தி பொது போக்குவரத்து தேவையை அதிகப்படுத்துங்கள். கோவில் வருமானத்தில் பேருந்து வாங்கி விடுங்கள்.எந்த ஒரு ஏற்பாடும் இல்லாமல், இதே நிலை ஏற்பட்டால் பெரிய போராட்டத்தை சமூக ஆர்வலர்கள் கையில் எடுத்தாக வேண்டிய சூழல் உருவாகும் என்று சமூக வலைத்தளத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

See also  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அண்ணாமலையார் கோயிலுக்கு சென்ற வேலூர் இப்ராஹிம்

எத்தனை முறை கூறினாலும் எந்த நடவடிக்கைகளும் இல்லை.6 மாதமாக கத்தியும் பயனில்லை.தற்போது மிகவும் கஷ்டமாக உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக அதிகாரிகளிடம் பேசியும் பயனில்லை. அதுவே தொடர்கிறது எது சொன்னாலும் எதுவும் நடப்பதில்லை மாவட்ட நிர்வாகத்தில். என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு உள்ளூர் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் உள்ளூர் மக்கள் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் இங்கு நிலவுகிறது என்றும், கூட்ட நெரிசல் மேலாண்மை தொடர்பான திட்டமிடலும், கட்டமைப்பு மாற்றமும் அவசியம். இது காலத்தின் கட்டாயம் என்றும் கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளன.


Link:http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!