Homeசெய்திகள்அமைச்சர் எ.வ.வேலுவை கிராம மக்கள் முற்றுகை

அமைச்சர் எ.வ.வேலுவை கிராம மக்கள் முற்றுகை

அமைச்சர் எ.வ.வேலுவை கிராம மக்கள் முற்றுகை
எனக்கு பதில் எம்.எல்.ஏவாக இருங்கள்-கலெக்டருக்கு அமைச்சர் திடீர் வேண்டுகோள்

சாலை, கால்வாய் வசதி கேட்டு அமைச்சர் எ.வ.வேலுவை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் எ.வ.வேலு, இன்று காலை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடம், நியாயவிலைக் கடை, அங்கன்வாடி கட்டிடங்களை திறந்து வைத்தார்.

அமைச்சர் எ.வ.வேலுவை கிராம மக்கள் முற்றுகை

ராதாபுரம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நான்கு வகுப்பறை கட்டிடங்கள், அகரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடத்தையும், காம்பட்டில் நியாயவிலைக் கடை கட்டிடம், பேராயம்பட்டில் புதிய பள்ளி கட்டிடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம், வானாபுரத்தில் புதிய பள்ளி கட்டிடங்கள், நியாயவிலை, அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

வாணாபுரம் காலனியில் நியாயவிலைக்கடையை திறந்து வைத்த போது அப்பகுதி மக்கள் அமைச்சரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக புகார் தெரிவித்தனர். சாலை இல்லை, கால்வாய் இல்லை பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை, 20 வருடமாக ரோடு போடப்படவில்லை என அமைச்சரிடம் கூறினர். அப்போது மு.பெ.கிரி எம்.எல்.ஏ சாலை, கால்வாய் அமைக்க ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார்.

அமைச்சர் எ.வ.வேலுவை கிராம மக்கள் முற்றுகை

அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை என கூறி திமுகவைச் சேர்ந்த உடல் ஊனமுற்றவர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை கார்கள் செல்ல முடியாதவாறு நடு வழியில் நிறுத்தினார். திமுக நிர்வாகிகள் பேசி அவரை அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

நிறைவாக வாணாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,

கடந்த இரண்டரை ஆண்டில் வாணாபுரம் ஊராட்சியில் ரூ.8கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை மூலம் திருமணக்கூடம் இந்த ஆண்டுக்குள் கட்டப்படும். திராவிட மாடல் ஆட்சி வந்தபிறகுதான் பல்வேறு தொலைநோக்கு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு இந்த ஆட்சியில் அதிகளவு திட்டங்கள் முன்னுரிமை வழங்கி செயல்படுத்தப்படுகிறது.

கலைஞர் உரிமைத்தொகை 1000 ரூபாய் கிடைக்காமல் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் நல்ல வழியை காட்டுவார்.

அமைச்சர் எ.வ.வேலுவை கிராம மக்கள் முற்றுகை

நான் இந்த பகுதியில் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக வருகிறேன் என்று சொன்னால் 10 பஞ்சாயத்து என்னை எப்போதும் கைவிட்டது கிடையாது. அப்படி சிறப்பாக பணியாற்றும் ஆற்றல் பெற்றவர்கள் இந்த பகுதியில் இருக்கிற தம்பிமார்கள். இங்குள்ள வாக்காளர்கள் என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை வீணாகாமல் பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

முதலமைச்சரின் சார்பாக அரசு நிகழ்ச்சிகளுக்கு நான் பல மாவட்டங்களுக்கு செல்கின்ற காரணத்தினால் எனக்கு பதில் நீங்களே(கலெக்டர்) எம்.எல்.ஏ மாதிரி இருந்து இருந்து தொகுதியை பார்த்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் 3 ஆயிரத்து 76 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 11 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி அனைவரையும் வரவேற்றார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!