Homeஅரசியல்பாஜக முக்கிய பிரமுகர் திடீர் வேட்பு மனு தாக்கல்

பாஜக முக்கிய பிரமுகர் திடீர் வேட்பு மனு தாக்கல்

பாஜக முக்கிய பிரமுகர் திடீர் வேட்பு மனு தாக்கல்
அண்ணாதுரை, கலியபெருமாள் பெயரிலும் மனு தாக்கல்
வேட்பு மனுவை மறந்த பாஜக பிரமுகர்

நிறைவு நாளான இன்று பாஜக பிரமுகர் ஒருவர் மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அண்ணாதுரை பெயரில் 3 பேரும், கலியபெருமாள் பெயரில் 2 பேரும் மனு தாக்கல் செய்தனர்.

தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19ந் தேதி நடக்கிறது. வாக்குகள் ஜூன் 4ந் தேதி எண்ணப்படுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 20ந் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது.

நிறைவு நாளான இன்று திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.அஸ்வத்தாமன், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியனிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

பாஜக முக்கிய பிரமுகர் திடீர் வேட்பு மனு தாக்கல்

அப்போது பாஜக மாவட்ட தலைவர் கே.ஆர்.பாலசுப்பிரமணியன், பாமக மாவட்ட செயலாளர்கள் ஏந்தல் பெ.பக்தவச்சலம், இல.பாண்டியன், அமமுக மாவட்ட செயலாளர் ஏ.பரந்தாமன் உடனிருந்தனர்.

ஒரே நாளில் 21 வேட்பு மனு

கடைசி நாள் என்பதால் இன்று ஒரே நாள் 21 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை தனது பெயரில் மேலும் 2 மனுக்களை தாக்கல் செய்தார். இன்று சுயேட்சை வேட்பாளர்கள் 14 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை பெயர் கொண்ட 3 பேரும், அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் பெயர் கொண்ட 2 பேரும் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு கட்சி தலைமை அறிவித்திருந்த வேட்பாளர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் திடீரென இன்னொருவரும் மனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி பாராளுமன்ற தொகுதியைச் சேர்ந்த பாஜக வடக்கு மாவட்டத் தலைவர் போளூர் சி.ஏழுமலை, திடீரென கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து 2.48 மணிக்கு திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது பாஜக அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாநில செயலாளர் ஏ.கே.ஆர்.கதிரவன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர்கள் டி.ஆர்.கிஷோர்குமார், சரவணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

சி.ஏழுமலையிடம் பாஜக தலைமை அறிவித்த அஸ்வத்தாமனுக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருக்கிறீர்களா? என கேட்டதற்கு தலைமை உத்தரவிற்கு இணங்க மனு தாக்கல் செய்திருக்கிறேன் என்று மட்டும் பதிலளித்தார்.

மாலை அணிவித்து வாழ்த்து

திருவண்ணாமலை தொகுதியில் நிற்பதற்கு சி.ஏழுமலை மனு தாக்கல் செய்திருக்கிறார் என்ற தகவல் பரவியதும், போளூர், ஆரணி பகுதியிலிருந்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பாஜகவினர். மனு தாக்கல் செய்து விட்டு வெளியே சி.ஏழுமலைக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொகுதி பார்வையாளரும், புதுப்பாளையம் ஒன்றிய கவுன்சிலருமான கே.ரமேஷ் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

பாஜக முக்கிய பிரமுகர் திடீர் வேட்பு மனு தாக்கல்

இது சம்மந்தமாக வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளிடம் கேட்ட போது ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அண்ணன்(சி.ஏழுமலை) ஆர்வமாக இருந்தார். ஆனால் இத் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டதால் அவருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. திருவண்ணாமலை தொகுதியாவது தாருங்கள் என தலைமையிடம் கேட்டிருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் விரக்தியில் இருந்து வந்தார்.

இந்நிலையில் அஸ்வத்தாமனுக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்யும்படி தலைமையிடமிருந்து சி.ஏழுமலைக்கு உத்தரவு வந்தது. இதனால் கடைசி நேரத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார் என்றனர்.

போளூர் சி.ஏழுமலை, வேட்பு மனுவின்றி உறுதி மொழி பத்திரத்தை மட்டும் எடுத்து வந்திருந்தார். மனு தாக்கல் செய்ய சில நிமிடங்களே இருந்த போது அவருடன் வந்திருந்தவர்கள் வேட்பு மனு இல்லாததை அறிந்து கலெக்டர் அலுவலகத்தில் மனுவை பெற்று அதை நிரப்பி அளித்தனர்.


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!