உங்கள் ராசிக்கு குருபெயர்ச்சி எப்படி இருக்கும்?
பழமை வாய்ந்த தண்டபாணி ஆசிரமம்
கணித்துள்ள குரு பெயர்ச்சி பலன்கள்
திருவண்ணாமலை மலை ஏறும் பாதையில் உள்ள 225 ஆண்டுகள் பழமை வாய்ந்த தண்டபாணி ஆசிரமம் சார்பில் அந்த ஆசிரமத்தின் வாலைச்சித்தர் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் எல்.சீனிவாசன் கணித்துள்ள 2024-25க்கான குருபெயர்ச்சி பலன்கள் வருமாறு,
வாசகர்கள் கவனத்திற்கு…
👉 இந்த குரு பெயர்ச்சி பலனானது அவரவர் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் தசாபுத்தியை பொருத்து மாறுபடும் என்பதை வாசகர்கள் அறியவும்.
மே 1 குருபெயர்ச்சி
01-05-2024 புதன்கிழமை, சித்திரை-18 ஆம் நன்னாளன்று மாலை 5-19 மணி அளவில் ஸ்ரீ குருபகவான் ரிஷப ராசிக்கு செல்கிறார். 12-ஆண்டுகளுக்கு ஒருமுறை தேவகுரு பிரகஸ்பதி ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்து ஒவ்வொருவரின் ராசிப்படி என்னென்ன பலன்கள் தருவார் என்பதை காண்போம்!
இந்த குரு பெயர்ச்சியால் அதிகளவு நன்மை பெறக்கூடிய ராசிகள் மேஷம், கடகம், கன்னி, விருட்சிகம், மகரம் ஆகும். மத்திம பலன்களை பெறக்கூடிய ராசிகள் கும்பம், மீனம் ஆகும். தீய பலன்களை பெறக்கூடிய ராசிகள் ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு ஆகும். இருப்பினும் அனைத்து ராசி அன்பர்களும் இந்த குருபெயர்ச்சி மஹாயாக பூஜையில் பங்கேற்று அர்ச்சனை செய்து கொள்வது மிகவும் சிறந்த பரிகாரமாகும்..
தொழிலில் நல்ல முன்னேற்றமும், லாபமும் ஏற்படும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு, விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் ஆகியவை கிடைக்கும். திருமண யோகம், புத்திரபேறு ஏற்படும். வீடு, மனை வாங்குவீர்கள். சனிபகவானால் பல தடைகள் இருப்பினும் ஸ்ரீ குரு பகவானால் பல நன்மைகள் ஒராண்டிற்கு கிடைக்கும். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரத்தை பூஜித்து வர நன்மைகள் மேலும் பெறுகும்.
ஜென்ம குருவால் மனசஞ்சலம், வீண் அலைச்சல், குடும்பத்தில் குழப்பம் ஏற்படும்.தொழிலில் போட்டியும், பின்னடைவும் ஏற்படும். மேலதிகாரிகளின் பகை விரும்பத்தகாத இடமாற்றம், எதிலும் டென்சன் ஏற்படும்.கடன் தொல்லை, உடல் சோர்வு, தொலை தூர பயணம் ஏற்படும். எதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஸ்ரீ நவக்கிரக எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.
விரைய குருவால் உங்களுக்கு சுபசெலவுகள் ஏற்படும். உங்கள் வீட்டில் திருமண வைபோகமோ, வீடு கட்டுதலோ, வாகனம் வாங்குதலோ போன்ற நல்ல காரியங்களுக்கு செலவுகள் செய்ய நேரிடும். அதே சமயம் தொழிலில் பின்னடைவு, கடன் வாங்குதல், எதிரிகளின் தொல்லை, நோயின் தொல்லை, வம்பு வழக்குகளும் ஏற்படும். ஒரு சிலர் வெளிநாடு செல்லக்கூடும். பணம் கையைவிட்டு கரையும். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரம் அல்லது ஸ்ரீ மஹாம்ருத்யுஞ்சய எந்திரத்தை பூஜித்து வர சிரமங்கள் குறையும்.
தனக்காரனான குருபகவான் லாபம் தரும் இடத்தில் சஞ்சரிப்பதால் தனலாபம், பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். தொழிலில் வெற்றி கிடைக்கும். புதியதாக தொழில் தொடங்குவீர்கள். பதவி, சம்பள உயர்வு ஏற்படும். நல்ல வேலை கிடைக்கும். காதலில் வெற்றியும், திருமண யோகமும் அமையும். புத்திர சம்பத்து, வீடு மனை வாகன யோகம் அமையும். புகழ் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் ஏற்படும். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரத்தை பூஜித்து வர நன்மைகள் பன்மடங்கு பெறுகும்.
பத்திலே குரு பதவியை பறிக்கும் என்ற ஜோதிட சொல்லுக்கு ஏற்ப தொழிலில் பல பிரச்சனைகள் ஏற்படும். கூட்டுத் தொழிலில் பிரச்சனைகள், கடன் தொல்லை, அவப்பெயர் ஏற்படும். வீடு, வாகனத்தால் செலவு, மருத்துவச் செலவு ஏற்படும். காதலில் தோல்வி, திருமணம் தள்ளி போகுதல் நடைபெறும். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவு வரும். உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.
ஒன்பதாமிடத்தில் குருபகவான் நீங்கள் நினைத்ததை எல்லாம் நடத்தி வைக்கப் போகிறார். தொழிலில் நல்ல முன்னேற்றம், லாபம் ஏற்படும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். பொன், பொருள், வாகனம் சேரும். சிலர் வீடு மனை வாங்குவீர்கள். தள்ளிப்போன திருமணம் கைகூடும். காதலில் வெற்றி, புத்திர சம்பத்து ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் ஏற்படும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். நோய் கட்டுக்குள் அடங்கி இருக்கும். ஸ்ரீ நவக்கிரக எந்திரத்தை பூஜித்து வர நன்மைகள் மேலும் பல பெருகும்.
எடுத்த செயல் தோல்வியில் முடியும். எப்போதும் டென்ஷனாகவே இருப்பீர்கள்… சோம்பல், தூக்கம், நோய் நொடி உங்களை ஆட்கொள்ளும். தொழிலில் மட்டுமல்ல, திருமணம், வேலைவாய்ப்பு என அனைத்திலும் இழுபறிதான். நகைகள் அடகு கடைக்கு போகும். வீண் செலவு ஏற்படும். மருத்துவ செலவு ஏற்படும். மனதை தளரவிடாதீர். உண்மையான பக்தியின் மூலம் இந்த சோதனைகளை நீங்கள் வெல்ல முடியும். ஸ்ரீ நவக்கிரக எந்திரம் அல்லது ஸ்ரீ மஹாம்ருத்யுஞ்சய எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.
குரு பார்க்க கோடி பாவம் நிவர்த்தி என்று சொல்லுவார்கள். எனவே, குருபகவானின் பார்வையால் தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபமும் ஏற்படும். கூட்டுத் தொழில் சிறக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, ஏற்படும். கணவன், மனைவி உறவு சிறக்கும். காதலில் வெற்றி உண்டாகும். திருமணம் கை கூடும். வீடு, வாகனம், பொன், பொருள், பணம் சேரும். சிலர் வெளிநாடு செல்வீர்கள். கோர்டு கேஸ் உங்களுக்கு சாதகமாக முடியும். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரத்தை பூஜித்து வர நன்மைகள் பெருகும்.
கடன் தொல்லை, நோயின் தொல்லை அதிகரிக்கும். தேவையில்லாத வீண் பிரச்சனைகள் வரும். பணம், பொருள் இழப்பு ஏற்படும். தொழிலில் பின்னடைவு, நஷ்டம் ஏற்படும். வீடு வாகனத்தால் செலவு, மருத்துவ செலவு, பிள்ளைகள் வகையில் செலவு என கையில் வைத்திருக்கும் காசை கரைத்து விடும். புதிதாக கடன் வாங்க வேண்டி வரும். மேலதிகாரிகளின் பகை உண்டாகும். செய்யாத குற்றத்திற்காக அவப்பெயர் ஏற்படும். ஸ்ரீ நவக்கிரக எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.
எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பொன், பொருள், பணம், வீடு, வாகனம், மனை என சேரும். தொழிலில் நல்ல லாபமும், வெற்றியும் கிடைக்கும். சிலர் புதிதாக தொழில் துவங்க நேரிடும். கடன் அடைபடும். கோர்டு கேஸ் வழக்குகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத விதமாக பெருமளவு பணம் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். திருமணம் கைகூடும். சிலர் வெளிநாடு செல்வீர்கள். ஸ்ரீ நவக்கிரக எந்திரத்தை பூஜித்து வர நன்மைகள் மேன்மேலும் பெருகும்.
எதிலும் மந்த நிலை இருக்கும். வீடு, வாகனம், நிலம், மனை போன்றவற்றில் செலவுகள் ஏற்படும். ஒரு சிலர் இவற்றை விற்கவும் செய்வீர்கள். புதிய பொன் ஆபரணங்கள் வாங்குவது கடினம். திருமணம் தள்ளிப் போகும். தாயிடம் மனவேற்றுமை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பகை ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு இழுபறியில் இருக்கும். தொலைதூர பயணம் ஏற்படும். ஸ்ரீ நவக்கிரக எந்திரத்தை பூஜித்து வர மந்த நிலை நீங்கி சில நன்மைகள் நடக்கும்.
எதிலும் கவனம் தேவை. எதையும் நிறுத்தி நிதானமாக யோசித்து முடிவு எடுங்கள். தொழிலில் மந்த நிலை இருக்கும். பண வரவு தடைபடும். நோயின் தொல்லை, கடன் தொல்லை இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். திருமணம் தள்ளி போகும். உடலில், மனதில் சோர்வு ஏற்படும். அலைச்சல் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைப்படும். தேவையற்ற விரும்பாத இடமாற்றம் இருக்கும். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரத்தை பூஜித்து வர சிரமங்கள் குறையும்.
வாசகர்கள் கவனத்திற்கு…
👉 இந்த குரு பெயர்ச்சி பலனானது அவரவர் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் தசாபுத்தியை பொருத்து மாறுபடும் என்பதை வாசகர்கள் அறியவும்.
தொகுப்பு :
‘ஜோதிட ரத்னா’ ‘ஆன்மிக செம்மல்’ ‘சௌமியன்’
சித்தர் மகன். Dr.L.சீனிவாசன், M.A.,D.A.,S.M.P.