Homeசெய்திகள்லஞ்ச வழக்கில் பெண் தாசில்தார் கைது

லஞ்ச வழக்கில் பெண் தாசில்தார் கைது

லஞ்ச வழக்கில் பெண் தாசில்தார் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பு

ஆரணி தாசில்தார் மஞ்சுளா, லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணியை அடுத்த காட்டுகா நல்லூர் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 54). அரசு ஒப்பந்ததாரர். இவர் தனது ஒப்பந்த வேலைக்காக சொத்து மதிப்பு சான்றிதழ் பெற விண்ணப்பித்திருந்தார். ரூ.20 லட்சத்திற்கு அரசுக்கு சேர வேண்டிய ரூ.7 ஆயிரத்து 900த்துக்கு வங்கியில் காசோலை எடுத்தார்.

பிறகு வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தாரின் பரிந்துரையை பெற்று சொத்து மதிப்பு சான்று பெறுவதற்காக ஆரணி தாசில்தார் மஞ்சுளாவை சந்தித்தார். அவர் சான்றிதழ் வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என கேட்டாராம். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என சீனிவாசன் கூறினாராம். கடைசியாக ரூ.10 ஆயிரம் தந்தால் மட்டுமே சான்று வழங்க முடியும் என கறாராக கூறி விட்டாராம்.

லஞ்ச வழக்கில் பெண் தாசில்தார் கைது

இதுபற்றி சீனிவாசன் திருவண்ணாமலையில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்சம் பெறுபவரின் கைரேகையை பதிவு செய்வதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சீனிவாசனிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர்.

டிஎஸ்பி திருவேல்முருகன், இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் அவரை பின் தொடர்ந்து சென்றனர்.

சீனிவாசன், தாசில்தார் மஞ்சுளாவை தொடர்பு கொண்டு லஞ்சம் கேட்ட பணத்தை எடுத்து வந்திருப்பதாக கூற அவர் இரவு காவலரிடம் கொடுக்க சொன்னாராம். இரவு காவலர் பாபு அந்த பணத்தை பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையுங்களவுமாக பிடித்தனர்.

இது சம்மந்தமாக தாசில்தார் மஞ்சுளா, இரவு காவலர் பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

லஞ்ச வழக்கில் பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!