Homeசெய்திகள்பார்ட் டைம் ஜாப்-ரூ.6 லட்சத்தை ஏமாந்த "இந்தியன்"

பார்ட் டைம் ஜாப்-ரூ.6 லட்சத்தை ஏமாந்த “இந்தியன்”

இந்தியன் என்ற வாலிபர் பார்ட் டைம் ஜாப் என்பதை நம்பி ரூ.6 லட்சத்தை இழந்தார். இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டுத் தந்தனர்.

இணைய வழி குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் கடவுச்சொற்களை (பாஸ்வேர்ட்) பகிர வேண்டாம், தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் வெளிக்காட்ட கூடாது, சமூக ஊடக(சோஷியல் மீடியா) சுயவிவரத்தை பாதுகாக்க வேண்டும், முன்பின் தெரியாத நபர்களுடன் ஒருபோதும் தொடர்பு கொள்ள கூடாது என பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் இணைய வழி மோசடி பேர் வழிகளிடம் பொதுமக்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆரம்பத்தில் வங்கி அதிகாரி போல் பேசி ஏடிஎம் கார்டு விவரங்களை பெற்று வங்கி கணக்கில் பணத்தை அபேஸ் செய்வது தொடர்கதையாகி வந்தது. இப்போது அது குறைந்திருக்கிறது.

பார்ட் டைம் ஜாப்-ரூ.6 லட்சத்தை ஏமாந்த "இந்தியன்"

இதையடுத்து புது வித ஆன்லைன் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. எங்கள் சேவைகளைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி, இப்போது, எங்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும், உறுப்பினராகப் பதிவு செய்து இன்றே 50சதவீத தள்ளுபடி பெற முன்பதிவு செய்யுங்கள் என்றெல்லாம் ஆசையை தூண்டி பணத்தை பெற்று ஏமாற்றுவது நடைபெற்று வருகின்றன.

பார்ட் டைம் ஜாப், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வருவதை பார்க்கலாம். இதுவும் போலியானது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எளிதான கூடுதல் வருவாயை வழங்கும் மோசடி விளம்பரங்களை நம்பி பணம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பார்ட் டைம் ஜாப் என்பதை நம்பி திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ.6 லட்சத்தை ஏமாந்திருக்கிறார். அவரது பெயர் இந்தியன். போளுர் வட்டம் கேளூர் கிராமத்தை சேர்ந்தவர்.

இவருக்கு டெலிகிராம் செயலியின் (Telegram) மூலம் தெரியாத நபரிடமிருந்து Part Time Job-க்கு (Work form home) குருஞ்செய்தி (SMS) வந்ததை பார்த்து அதில் கூறியது போல் (Task) செய்திருக்கிறார். பிறகு அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தியுள்ளார். பின்பு தான் முதலீடு செய்த பணத்தை எடுக்கலாம் என்று link-ல் சென்ற போது கூடுதலாக பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என மெசேஜ் வந்தது. பிறகு அவர்களை தொடர்பு கொள்ள இந்தியனால் முடியவில்லை.

பார்ட் டைம் ஜாப்-ரூ.6 லட்சத்தை ஏமாந்த "இந்தியன்"

இது குறித்து இந்தியன், சைபர் கிரைம் பண மோசடி புகார் எண் 1930 -ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆ.பழனி தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் உரிய விசாரணை செய்து துரிதமாக செயல்பட்டு அவர்கள் இழந்த பணத்தை வங்கியின் உதவியுடன் மீட்டனர்.

மீட்கப்பட்ட பணம் ரூ.6லட்சத்து 19ஆயிரத்தை 628-ஐ புகார்தாரர் இந்தியனிடம், மாவட்ட காவல் அலுவலகத்தில் டி.எஸ்.பி,பழனி வழங்கினார்.


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!