திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உணவு, தங்குமிடம், மாதம்ரூ.4 ஆயிரத்துடன் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் மூன்றாண்டுக்கான சான்றிதழ் படிப்பில் மாணவர்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
திருக்கோயில்களில் திருமுறைகள் குறைவின்றி ஓதிட ஏதுவாக, திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் சார்பாக ஓதுவார் பயிற்சிப் பள்ளி நடைபெற்று வருகிறது. அரசால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி பெற விரும்பும் இந்து மதத்தை சேர்ந்த தகுதி உடையவர்கள். படிவத்தில் உரிய விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சேர்க்கைக்கான தகுதிகள்:-
1) விண்ணப்பதாரிகள் இந்துக்களாக இருக்க வேண்டும்.
2) 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
3) குறைந்த பட்சம் 13 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 20 வயதிற்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.
4) இயற்கையிலேயே சாரீரமும் (குரல் வளம்) உடல் வளமும் பெற்றிருத்தல் வேண்டும். சமய தீட்சை பெற்றிருத்தல் வேண்டும்.
5) பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆகியோர்கள் ஒருவரை கொண்டு உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும்.
6) பயிற்சி நிலையத்தில் பயில விரும்பும் மாணவர்கள் சமய கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.
குறிப்பு
1) பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி பயில வேண்டும்.
2) பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு, உறைவிடம், சீருடை, பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.4,000/- உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும்.
3) மாணவர்களின் தேர்வு, தேர்வுக் குழுவின் முடிவிற்குட்பட்டது.
4) விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்.19.07.2024 அன்று மாலை 05.00 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும்.
5) விண்ணப்ப படிவங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் மற்றும் https://hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
இணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்,
திருவண்ணாமலை-606 601