Homeசெய்திகள்ஆர்.டி.ஓ-வி.ஏ.ஓ-வினர் இடையே கடும் வாக்குவாதம்

ஆர்.டி.ஓ-வி.ஏ.ஓ-வினர் இடையே கடும் வாக்குவாதம்

ஆர்.டி.ஓ-வி.ஏ.ஓ-வினர் இடையே கடும் வாக்குவாதம்
ஆர்.டி.ஓ அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

வி.ஏ.ஓ மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து வி.ஏ.ஓ சங்கத்தினர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்.டி.ஓ-வுக்கும், வி.ஏ.ஓ சங்கத்தினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருவண்ணாமலை அடுத்த பொற்குணம் கிராம நிர்வாக அதிகாரியாக (வி.ஏ.ஓ) பணிபுரிந்து வந்த ரமேஷ், தேவனாம்பட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த மாற்றத்தை ரத்து செய்யக் கோரி ரமேஷ், கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) மந்தாகினியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். ஆனால் அவரது மாறுதல் ரத்து செய்யப்படவில்லை.

ஆர்.டி.ஓ-வி.ஏ.ஓ-வினர் இடையே கடும் வாக்குவாதம்

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோட்டாட்சியரை சந்திக்க இன்று மாலை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை சந்திக்க கோட்டாட்சியர் மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் வி.ஏ.ஓ சங்கத்தினர் அந்த அலுவலகத்திற்குள் நேர்முக உதவியாளரின் இருக்கைக்கு முன்பு தரையில் உட்கார்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர்.

அதன் பிறகு வி.ஏ.ஓ சங்கத்தினரை கோட்டாட்சியரை சந்திக்க அவரது அறைக்கு வரும்படி அங்கு பணிபுரியும் அலுவலர்கள் அழைத்தனர். நாங்கள் இங்கேதான் இருப்போம் என வி.ஏ.ஓ சங்கத்தினர் சொல்லி விட்டனர்.

See also  சிமெண்ட் சாலையாக மாறும் திருவண்ணாமலை மாடவீதி

தொடர்ந்து எங்களுடைய சங்க உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட முறையற்ற பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை வைப்பதற்காக தங்களை (ஆர்.டி.ஓ) சந்திக்க வந்த மாவட்ட, வட்ட நிர்வாகிகளை காத்திருக்க வைத்து விட்டு பின்பு அவமரியாதை செய்யும் நோக்கத்தோடு சந்திக்க மறுக்கும் வருவாய் கோட்ட அலுவலரை(ஆர்.டி.ஓ) கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்டு சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.

அதன் பிறகு போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த ஆர்.டி.ஓ மந்தாகினி, மாறுதல் செய்யப்பட்ட வி.ஏ.ஓ-வை பார்த்து நான் ஒரு வாரம் பொறுத்து மாற்றித் தருகிறேன் என்று தானே சொன்னேன். எனக்கு வேண்டுகோள் தான் வைக்க முடியும், எப்படி என்னை டிமாண்ட் செய்ய முடியும்? என்று கேட்டார்.

அதற்கு சங்க நிர்வாகிகள் உங்களை பார்க்க வந்தோம், போன் செய்தோம். மெசேஜ் அனுப்பினோம் என்றனர். அதற்கு ஆர்டிஓ எனக்கு ஒரு நாளைக்கு 60 கால்கள் வருகிறது. அதில் நிறைய கால்கள் மிஸ் ஆகும் என்றார். ஒருத்தருக்கு பெரிய பாதிப்பு ஆகிவிட்டது, ஆர்டிஓ மேடத்துக்கு கால் செய்கிறார் என்றால் நீங்கள் எடுக்க மாட்டீர்களா? என சங்க நிர்வாகிகள் கேட்க, நான் எடுக்கவில்லை என்றால் எனக்கு அடுத்து தாசில்தார் போன்ற அடுத்த நிலை அலுவலருக்கு தகவல் வரும். ஏன் நீங்கள் வேறு யாருக்காவது தகவல் சொல்ல வேண்டியது தானே? ஆர்டிஓ கிட்ட மட்டும் தான் பேச வேண்டுமா? பி.ஏவிடம் பேச வேண்டியதுதானே? என கேட்டார்.

See also  பெண்களுக்கு பாத பூஜை செய்த விவசாயிகள்

ஆர்.டி.ஓ-வி.ஏ.ஓ-வினர் இடையே கடும் வாக்குவாதம்

சங்க நிர்வாகிகள் பி.ஏ முருகனுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். பிஏ லீவில் சென்று மூன்று வாரம் ஆகிறது என ஆர்.டி.ஓ கூற அது எங்களுக்கு தெரியாது என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். பிஏ லீவு என போஸ்டர் போட்டா ஒட்ட முடியும்? நீங்கள் தான் யார் பிஏ என்று தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்.டி.ஓ சொல்ல வாக்குவாதம் முற்றியது.

எனக்கு தேவனாம்பட்டிற்கு ஆள் வேணும், அந்த கிராமத்தை அப்படியே விட முடியாது. ஒரு வாரம் இன்சார்ஜ் பார்க்க சொல்லி இருக்கிறேன். ஒரு நிர்வாக வசதிக்காக ஒரு விஏஓ இன்சார்ஜ் பார்க்க முடியாது என்று சொன்னால் அப்புறம் என்ன அட்மினிஸ்ட்ரேஷனை பாலோ செய்கிறீர்கள்? என ஆர்.டி.ஓ கடுகடுத்தார்.

கவுன்சிலிங்கில் எங்களை ஒரு கிராமத்தை தேர்வு செய்ய சொல்லி உரிமை கொடுத்திருக்கிறார்கள். இன்னும் 3 வருடம் ஆகாத போது ஏன் மாற்றம் செய்கிறீர்கள்? என சங்க நிர்வாகிகள் கொதித்தனர். முடிவில் இதையடுத்து நாளை பழைய இடத்திற்கு ஆர்டர் போட்டு தருவதாக கோட்டாட்சியர் கூறினார். அதன்பிறகு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

See also  குழந்தை உள்பட 6 பேர் துடிதுடித்து இறந்த பரிதாபம்

இச்சம்பவத்தினால் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!