Homeசெய்திகள்காந்தியடிகளுக்கு திருவண்ணாமலையை பிடித்தது ஏன்?

காந்தியடிகளுக்கு திருவண்ணாமலையை பிடித்தது ஏன்?

காந்தியடிகளுக்கு திருவண்ணாமலையை பிடித்தது ஏன்?
புதிய சிலையை திறந்து வைத்து அமைச்சர் எ.வ.வேலு தகவல்
புதிய கல்வெட்டு முன் வந்தது-1952 பின் சென்றது.

காந்தியடிகளின் மனதில் அழுத்தமாக இருந்த ஊர் திருவண்ணாமலை என புதிய சிலையை திறந்து வைத்து அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருவண்ணாமலை தேரடித் தெரு-பெரியத் தெரு சந்திப்பில் நன்கொடையாளர்களின் உதவியோடு காந்தி சிலை புதியதாக நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து பேசினார்.

காந்தியடிகளுக்கு திருவண்ணாமலையை பிடித்தது ஏன்?

அவர் பேசியதாவது,

ஏக இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமை அண்ணல் காந்தியடிகளை தான் சேரும். அவர் குஜராத்தில் பிறந்திருக்கலாம். ஆனால் அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு நீண்ட தொடர்பு உண்டு. வாழ்க்கை வரலாற்றில் அவரே குறிப்பிடுகிறார், எனக்கு தியாக மனப்பான்மை, உழைக்கிற எண்ணம் வந்ததற்கு காரணம், உண்மை பேசுகிற காரணம் எதுவென்றால் தமிழர்கள் தான் என்று.

இனிமையான தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர்களை வைத்து தமிழை கற்றுக் கொண்டேன், எனக்கு தமிழ் தெரியும் என அவர் எழுதுகிறார். 1915-ல் காந்தியடிகள் முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி என்ற கிராமத்திற்குத்தான் வருகை புரிந்தார். 1919-ல் சத்தியாகிரகத்தை நடத்துவது குறித்து ராஜாஜி இல்லத்தில் உட்கார்ந்து பேசினார். காந்தியை அடையாளப்படுத்திய அந்த உடை கூட தமிழ்நாட்டு உடையாக தான் இருந்தது என சொல்லும்போது பெருமைப்பட வேண்டும்.

See also  அமாவாசைக்கு பொருட்கள் வாங்க சென்ற 3 பேர் பலி

அவர் இங்கு பல இடங்களில் வந்திருந்த போதிலும் அவர் குறிப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால் தமிழ்நாட்டில் என் மனதில் இன்றும் நிழலாடிக் கொண்டிருக்கிற பகுதி எது என்றால் கடலூர், பரங்கிப்பேட்டை, குடந்தை, திருச்சி, புதுக்கோட்டை, சென்னை, இதைவிட எல்லாம் எனக்கு மனதில் அழுத்தமாக இருப்பது திருவண்ணாமலை என்கிற ஆன்மீக நகர் தான் எனக்கு அழுத்தமாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

காந்தியார் நமது மண்ணுக்கு வந்திருக்கிறார். ஒரு நாள் தங்கி இருக்கிறார். அப்போது இருந்த பெருமக்கள் அவரை வரவேற்று இருக்கிறார்கள். அவருக்கு வேண்டிய பணிவிடை செய்திருக்கிறார்கள். உணவு அளித்திருக்கிறார்கள். ஆகவே காந்தியார் இங்கே உலாவி இருக்கிறார். காந்தி உலாவிய மண்ணில் நாம் உலாவிக் கொண்டிருக்கிறோம். அதுதான் நமக்கு இருக்கிற பெருமை.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ., எ.வ.வே.கம்பன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், கோட்டாட்சியர் மந்தாகினி, நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், துணைத் தலைவர் ராஜாங்கம், எ.வ.வே.கம்பன், மாவட்ட கவுன்சிலர்கள் இல.சரவணன், ஆராஞ்சி ஆறுமுகம், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

See also  வளர்ச்சி பணிக்கு தடை-பெண் ஊராட்சி தலைவர் அதிரடி முடிவு

காந்தியடிகளுக்கு திருவண்ணாமலையை பிடித்தது ஏன்?

புதிய சிலையின் பின்னணி

பேகோபுரத்தெரு, பெரியத்தெரு வரை சிமெண்ட் ரோடு போடப்பட்டது. சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பதால் அப்போதிருந்த காந்தி சிலை அகற்றப்பட்டது. சிலையும், பீடமும் உறுதியாக இருந்தன. இதனால் பீடம் டிரில்லிங் மிஷின் வைத்து இடிக்கப்பட்டது. சிமெண்ட் ரோடு பணிகள் முடிவுற்று போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில் அகற்றப்பட்ட காந்தி சிலை மீண்டும் நிறுவப்படவில்லை. இதை கண்டித்து காங்கிரஸ் பிரமுகர் குமரேசன், வாயில் கருப்பு துணி கட்டி சிலை இருந்த இடத்தில் போராட்டம் நடத்தினார். இந்நிலையில் அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி வருவதை யொட்டி புதியதாக காந்தி சிலை நிறுவப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. சிலையின் பீடத்தின் முன்புறத்தில் அமைச்சர் எ.வ.வேலு, பிச்சாண்டி, கலெக்டர் பெயர் பொறித்த கல்வெட்டு காட்சியளிக்கிறது. ஏற்கனவே பழைய சிலையின் முன்புறம் இருந்த 1952ம் ஆண்டு கல்வெட்டு சிலையின் பக்கவாட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதே போல் திருவள்ளுவர் சிலையும் அகற்றப்பட்டு புதிய சிலை நிறுவப்பட்டதும், அதில் அமைச்சர் எ.வ.வேலு பெயர் பொறித்த கல்வெட்டு இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!