Homeசெய்திகள்திருவண்ணாமலையில் 4 வழிச்சாலை பணிகள் தீவிரம்

திருவண்ணாமலையில் 4 வழிச்சாலை பணிகள் தீவிரம்

திருவண்ணாமலையில் முதல்கட்டமாக 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணி ரூ.60 கோடியில்நடைபெற்று வருகிறது.

ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு மணலூர்பேட்டை சாலையில் ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடை, வீடுகள் இடிக்கப்பட்டன.

தொடர்ந்து திருக்கோயிலூர் ரோடு, வேட்டவலம் ரோடு, போளூர் ரோடு ஆகிய பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தண்டராம்பட்டு ரோட்டில் எப்போதும் இல்லாத அளவு வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. இதே போல் சில கடைகள் முழுவதுமாகவும், சில கடைகள் பாதி அளவிற்கும் இடிக்கப்பட்டது. தேனிமலையில் இதே போல் கடை, வீடுகள் இடித்து தள்ளப்பட்டன.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.121 கோடியில் திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வரை 4 வழி சாலை அமைக்கப்படுவதால் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. முதல் கட்டமாக திருவண்ணாமலை காமராஜர் சிலையிலிருந்து செட்டிப்பட்டு வரை 5.6 கிலோமீட்டர் தூரத்திற்கான சாலை 4 வழி சாலையாக மாற்றும் பணி தொடங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்காக ரூ.60 கோடி செலவிடப்படுகிறது.

See also  போலீஸ் துரத்திய வாலிபர் பிணமாக கிடந்தார்

திருவண்ணாமலையில் 4 வழிச்சாலை பணிகள் தீவிரம்

புதிய சாலை அமைக்கப்பட வேண்டும் என்றால் பழைய தார் சாலையை அகற்றி அதே உயரத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். இதனால் பழைய தார் சாலைகள் நவீன இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. இந்த இயந்திரம் ஒரே நேரத்தில் தார் சாலையை சுரண்டி அதன் துகள்களை அரைத்து லாரியில் கொட்டுகிறது. இதனால் நேரம் மிச்சமாவது மட்டுமன்றி அகற்றப்பட்ட தார் துகள்கள் வேறு பணிகளுக்கு மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படும் என்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த 4 வழிச்சாலையில் சென்டர் மீடியம் அமைக்கப்படுகிறது. மேலும் பக்க கால்வாய் வரை சாலை அகலப்படுத்தப்படுவதால் சாலை விசாலமாக காட்சியளிக்கிறது.

ஏற்கனவே இருவழிப்பாதையாக இருந்த போது தண்டராம்பட்டு சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்றன. இதனால் உயிர் பலிகளும் ஏற்பட்டது. பொதுமக்கள் சாலைமறியல் செய்ததால் சாலை சந்திப்புகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் இந்த சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படுவதால் அதிவேக வாகனங்களால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நகர பகுதியில் முக்கிய இடங்களில் வேகத்தடையோ அல்லது வேகத்தை குறைத்திடும் வண்ணம் பேரிகார்டுகளையோ அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

See also  திருவண்ணாமலை லாட்ஜ்களில் போலீஸ் அதிரடி ரெய்டு

திருவண்ணாமலையில் 4 வழிச்சாலை பணிகள் தீவிரம்

 

இந்நிலையில் இன்று 3 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி ரோட்டில் உள்ள வாழவச்சனூர் கிராமத்தில் திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்புபொறியாளர் ஆர்.கிருஷ்ணசாமி அறிவுறுத்தலின்படி, கோட்ட பொறியாளர் ப.ஞானவேலு, உதவி கோட்ட பொறியாளர் அன்பரசு ஆகியோர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பில் இருந்த 3 வீடுகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அதிரடியாக இடித்து தள்ளப்பட்டது. வீடுகள் இடிக்கப்படுவதை பார்த்ததும் வீட்டின் உரிமையாளர்கள் பொருட்களை ரோட்டில் எடுத்து வந்து வைத்தனர்.

திருவண்ணாமலை – திருக்கோயிலூர் ரோடு 4 வழிச்சாலையாகவும், மணலூர்பேட்டை ரோடு இருவழிச்சாலையாகவும் மாற்றப்பட்டுள்ளது. இப்போது கள்ளக்குறிச்சி ரோடு 4 வழிச்சாலை யாக மாற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!