Homeசெய்திகள்ஜனவரியில் புதிய பஸ் நிலையம் திறப்பு-எ.வ.வேலு தகவல்

ஜனவரியில் புதிய பஸ் நிலையம் திறப்பு-எ.வ.வேலு தகவல்

ஜனவரியில் புதிய பஸ் நிலையம் திறப்பு-எ.வ.வேலு தகவல்
பழைய பஸ் நிலையத்தில் கார் பார்க்கிங் அமைக்கலாமா? என ஆலோசனை
ரயில்வே நிலையத்திலிருந்து பஸ் நிலையத்திற்கு வர நடைமேடை
இப்படி பண்ணிட்டாங்களே… அமைச்சரிடம் முறையிட்ட பிரபல தொழிலதிபர்

திருவண்ணாமலை புதிய பஸ் நிலையம் ஜனவரி மாதம் திறக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருவண்ணாமலை திண்டிவனம் ரோட்டில் பாலத்திற்கு அடியில் டான்காப் ஆலை செயல்பட்டு வந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தின் முன்பு குடியிருந்தவர்களுக்கு பல்லவன் நகரில் இடம் ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. எனவே பஸ் நிலையத்தின் முன்பு இருந்த வீடுகள் இடிக்கப்பட்டன.

இதையடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன், சி.என்.அண்ணாதுரை எம்.பி, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் கே.ஜி.சத்திய பிரகாஷ், வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆர்.கிருஷ்ணசாமி கோட்ட பொறியாளர் பி.ஞானவேல் உதவி கோட்ட பொறியாளர் கே.அன்பரசு மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட திமுக பொருளாளர் பன்னீர்செல்வம், நகர திமுக செயலாளர் கார்த்தி வேல்மாறன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

பிறகு அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கூடும் பக்தர்களின் எண்ணிக்கை

திருவண்ணாமலையை அடையாளப்படுத்துவது ஆன்மீகம் தான். இங்கு இருக்கிற அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகிற மக்களுடைய எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. எனவே மக்களுடைய கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் புதிதாக ஒரு பேருந்து நிலையத்தை கட்ட அனுமதி அளித்தார். முதல் கட்டமாக ரூ.30 கோடிக்கு பஸ் நிலையத்தை கட்டுவதற்கு ஒப்பந்தங்கள் எல்லாம் நகராட்சி மூலமாக போடப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

See also  போலி பெயிண்ட் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

ஜனவரியில் புதிய பஸ் நிலையம் திறப்பு-எ.வ.வேலு தகவல்

போதுமான அளவிற்கு பஸ்களில் நிறுத்துவதற்கு இடமில்லை, கூடுதலாக பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதால் பேருந்து நிலையத்தை யொட்டி உள்ள வருவாய்த் துறை மூலம் உள்ள 4 ஏக்கர் இடத்தை கொடுப்பதற்கு கலெக்டர் ஒப்புதல் அளித்தார். நகராட்சி அமைச்சர் நேருவை சந்தித்து கூடுதலாக பஸ்களை நிறுத்துவதற்கு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க மேலும் ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டு அரசு அனுமதி கிடைத்துள்ளது.

முதல் கட்ட பணி என்பது 31-12-2024-க்குள் முடிக்கப்பட்டு விடும். ஜனவரி மாதம் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் ஒப்புதல் பெற்று தொடங்கி வைப்போம். பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் 6 மாத காலம் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இங்கு போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே விரிவாக்க பணிகளும் சேர்ந்து நடைபெறும்.

மேயருக்கு செங்கோல்

விரிவாக்க பணி நடந்து முடிந்த பிறகு ஏறத்தாழ 100 பேருந்துகள் நிறுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சி அறிவிக்கப்பட்டு நடைமுறையில் வந்து விட்டது. இதற்காக விழா ஒன்று எடுக்க வேண்டியது உள்ளது. விரைவில் எடுப்போம். மாநகராட்சிக்கு அடையாளமாக மேயருக்கு கோட்(அங்கி) தேவைப்படுகிறது. ஆட்சியின் அடையாளமாக செங்கோல் தேவைப்படுகிறது. செங்கோல் நமது ஊரை அடையாளப்படுத்தும் விதமாக செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

See also  ரூ.20 கோடி மோசடி- திருப்பதி பெண்கள் மீது புகார்

ரயில் நிலையத்திலிருந்து பஸ் நிலையத்திற்கு வர வேண்டும் என்றால் பாலத்தில் ஏறி சுற்றிக் கொண்டுதான் வர வேண்டும். எனவே ரயில் நிலையத்திலிருந்து பஸ் நிலையத்திற்குள் செல்ல நகரும் நடைமேடை தேவை என கேட்டுள்ளோம். அதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது. விரைவில் டெண்டர் கோரப்பட்டு தரமான கம்பெனியின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால் அங்கிருந்து இங்கு வரலாம், இங்கிருந்து அங்கு சென்று விடலாம்.

பழைய பஸ் நிலையம்

பழைய பேருந்து நிலையத்தை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. நகரப் பேருந்து நிலையமாக மாற்றி விடலாம் என்ற ஒரு கருத்து உள்ளது. அப்படி என்றால் நகரப் பேருந்தில் வருபவர்கள் இந்த பஸ் நிலையத்திற்கு எப்படி வருவார்கள்? என்று கேள்வியும் உள்ளது. பொதுமக்களுக்கு பயன் அளிக்கிறது என்றால் நகர பேருந்து அங்கு நிறுத்தப்படும்.

நமக்கு ஆந்திராவில் தான் அதிக கூட்டம் வருகிறது. இப்போது உள்ள பஸ் ஸ்டாண்டும் வேலூர் ரோட்டில் தான் உள்ளது. எனவே வெளியூரில் இருந்து வருகிற பஸ், கார்கள் எல்லாம் பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி செய்து கொடுக்கலாமா? எனவும் ஆலோசனை உள்ளது. போக்குவரத்து சம்பந்தமாக துணை சபாநாயகர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது அவர்கள் என்ன பரிந்துரை செய்கிறார்களோ அது நிறைவேற்றப்படும்.

See also  தி.மலை வளர திட்டமிடுங்க-வேலுவுக்கு விஐடி விசுவநாதன் வேண்டுகோள்

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனவரியில் புதிய பஸ் நிலையம் திறப்பு-எ.வ.வேலு தகவல்
இடிக்கப்பட்ட பெட்ரோல் பங்க் அலுவலகம்

புதிய பஸ் நிலையத்தின் முன்புறம் இருந்த டிபிஎன் பெட்ரோல் பங்க், பாலம் அமைக்கப்பட்ட பிறகு செயல்படாமல் இருந்தது. பிறகு திண்டிவனம் ரோட்டில் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் பஸ் நிலையத்தின் முன்புறம் விசாலமாக இருக்க வேண்டும் என்பதற்காக செயல்படாமல் இருந்த பெட்ரோல் பங்க் இடம் விலை பேசப்பட்டது. இது சம்மந்தமாக ஆவணங்கள் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மாற்று வீடு தரப்பட்ட தூய்மை பணியாளர்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. அப்போது அந்த பெட்ரோல் பங்க் அலுவலக கட்டிடமும் இடிக்கும் பணி தொடங்கியது. இதைக் கேள்விப்பட்டதும் அதன் உரிமையாளரும், பிரபல தொழிலதிபருமான டிபிஎன்.தேவராஜ் அதிர்ச்சி அடைந்தார். இடத்திற்கான விலையையும் தரவில்லை, இடத்தையும் எழுதியும் வாங்கவில்லை, அப்படி இருக்கையில் கட்டிடத்தை இடிப்பது எப்படி நியாயம்? என அவரது தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதை அடுத்து இடிப்பது நிறுத்தப்பட்டது.

பஸ் நிலையத்தை பார்வையிட வந்த அமைச்சர் எ.வ.வேலுவிடம் இது பற்றி டிபிஎன்.தேவராஜ் முறையிட்டார். அப்போது அவரிடம் அதிகாரிகள் இடம் ஆர்ஜிதம் சம்மந்தமாக அரசிடம் விரைவில் அனுமதி பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

முந்தைய செய்தி…

புதிய பஸ் நிலையத்திற்காக விலை பேசப்படும் பெட்ரோல் பங்க்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!