Homeசெய்திகள்சர்ச்சை சாமியார் அன்னபூரணிக்கு 3-வது திருமணம்

சர்ச்சை சாமியார் அன்னபூரணிக்கு 3-வது திருமணம்

சர்ச்சை சாமியாரான அன்னபூரணிக்கு திருவண்ணாமலை அருகே இன்று 3-வது திருமணம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள ராஜாதோப்பில் 1 ஏக்கர் இடம் வாங்கி ஆசிரமம் கட்டி நடத்தி வருபவர் சர்ச்சை சாமியார் அன்னபூரணி.

அடுத்தவரின் கணவர் அரசு என்பவருடன் வாழ்ந்து வந்தது குறித்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அவர் பங்கு கொண்டு விளக்கம் அளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

பிறகு ஆன்மீகவாதியாக மாறிய அன்னபூரணி தனது பெயரை, ‘அன்னபூரணி அரசு அம்மா’ என்று மாற்றிக் கொண்டார். இதையடுத்து அன்னபூரணி கீழ்பென்னாத்தூர் ராஜாதோப்பில், தேவேந்திரன் என்பவருக்கு சொந்தமான இடத்தை விலைக்கு வாங்கி ஆசிரமம் கட்டி அங்கு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.

சர்ச்சை சாமியார் அன்னபூரணிக்கு 3-வது திருமணம்

கடந்த 2022-ஆம் ஆண்டு இந்த ஆசிரமத்தில் அன்னபூரணி தனது 42 வது அவதார நாளை கொண்டாடிய போது உடல் முழுதும் மலர்கள் அலங்கரிக்கப்பட்ட நிலையில் காட்சி அளித்தார். அப்போது அவர் இருக்கையிலிருந்து எழுந்து சிறிது நேரம் சாமி வந்து ஆடுவது போல் ஆடினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், உணர்வுபூர்வமான அன்பை எல்லாம் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. எங்களுடைய லவ்வை கொச்சைப்படுத்தி பேசுகிறீர்கள். சித்தரித்துப் போடாதீர்கள் என்று கோபப்பட்டார்.

See also  முதியவரை தொடர்ந்து இளைஞரும்-சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

இந்நிலையில் தன்னிடம் உதவியாளராக இருந்த, தன்னுடன் வயது குறைந்தவரான ரோஹித் என்பவருடன் மலேசியா சென்றிருந்த அன்னபூரணி, தனக்கு முதல் திருமணம் நடைபெற்ற நவம்பர் 28-ம் தேதி ரோஹித்துடன் திருமணம் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி அவரது திருமண நிகழ்ச்சி கீழ்பென்னாத்தூர் ராஜாதோப்பில் இன்று காலை நடைபெற்றது. புரோகிதர்கள் யாகம் வளர்த்து மந்திரங்கள் ஓதி திருமண சடங்குகளை நடத்தினர். அன்னபூரணியும், ரோஹித்தும் ஒருவருக்கொருவர் மாலையை அணிவித்துக் கொண்டனர்.

அதன்பிறகு தாலியை பக்தர்களுக்கு காட்டிய புரோகிதர், அதை ரோஹித்திடம் கொடுத்தார். அதை செயின் போன்று அன்னபூரணி கழுத்தில் ரோஹித் அணிவித்தார். பிறகு அன்னபூரணியின் கால் விரலில் மெட்டியை அணிவித்தார். அதன்பிறகு இருவரும் இணைந்து பக்தர்களுக்கு ஆசீர்வாதம் அளித்தனர்.

இந்த திருமண நிகழ்ச்சியில் சுற்றுப்புற மக்களும், வெளிமாவட்ட பக்தர்களும் பங்கேற்றனர்.

இதுபற்றி பக்தர் ஒருவர் கூறுகையில், அன்னபூரணி மீது பலரும் பல விமர்சனங்கள் வைத்தாலும், அவர் தெய்வீக சக்தி உடையவர், அவரால் எனது பிரச்சனைகள் தீர்ந்தது என்றார்.

See also  பள்ளி வகுப்பறையின் மேல் தளம் இடிந்து விழுந்தது

இந்நிலையில் 3-வது திருமணம் செய்த அன்னபூரணிக்கு எதிரான விமர்சனங்களும், ஆதரவான கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!