Homeஆன்மீகம்பருவதமலை ஏற கட்டணம் -பக்தர்கள் அதிர்ச்சி

பருவதமலை ஏற கட்டணம் -பக்தர்கள் அதிர்ச்சி

கலசபாக்கம் அருகே உள்ள பருவதமலை மீது ஏற பக்தர்களிடம் 10 ரூபாய் வசூலிப்பது நேற்று மகாதீப நாளில் அமுலுக்கு வந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த தென்மகாதேவ மங்கலத்தில் 4560 அடி உயரத்தில் பருவதமலை அமைந்திருக்கிறது. இந்த மலை உச்சியில் மல்லிகார்ஜூனர் மற்றும் பிரம்மராம்பிகை கோயில் உள்ளது.

தங்களது பிரச்சனைகள் தீர பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், கார்த்திகை தீப நாட்களில் ஏராளமான பக்தர்கள் பருவதமலை மீது ஏறி சிவபெருமானை வணங்கி விட்டு செல்கின்றனர். தென்னிந்தியாவில் புகழ் பெற்ற மலைக்கோயில்களில் ஒன்றான பருவதமலைக்கு பல மாநிலங்களிலிருந்தும் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகின்றனர். 26 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலையை வலம் வருவதும் பிரபலமாகி வருகிறது.

பருவதமலை ஏற கட்டணம் -பக்தர்கள் அதிர்ச்சி

பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் 4560 அடி உயர மலையை ஏறி சாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. பர்வதமலையில் மலையேற ஓரளவுக்கு மட்டுமே பாதை வசதி உள்ளது. மலையின் மேல்நோக்கி செல்லும் பாதை செங்குத்தாக காணப்படும். குமரி நெட்டு, கடப்பாறை நெட்டு பகுதிகளில் கம்பிகளையும், கடப்பாறைகளையும் பிடித்து மேலே ஏறிச் செல்ல வேண்டும்.

See also  தொண்டரீஸ்வரர், காமாட்சியம்மன், கிரிவலப்பாதை ஆஞ்சநேயர்

நேற்று அந்த மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மகாதீபத்தை பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். மலையடிவாரத்தில் இருந்த வனத்துறையினர் ஒவ்வொருவரிடமிருந்தும் 10 ரூபாயை வசூலித்தனர். என்றைக்கும் இல்லாமல் திடீரென 10 ரூபாய் வசூலிக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எதற்காக பணம் வசூலிக்கிறீர்கள் என பக்தர்கள் கேட்ட போது பராமரிப்பு கட்டணம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

பருவதமலை ஏற கட்டணம் -பக்தர்கள் அதிர்ச்சி

இது பற்றி வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது,

மகாதீப நாளில் இருந்து இந்த கட்டணத்தை வசூலிக்க மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டிருக்கிறார். சூழல் கட்டணம் என வசூலிக்கப்படுகிறது. பவுர்ணமி நாட்களில் 20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் வரை பக்தர்கள் வருகின்றனர். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரத்திலிருந்து நாலாயிரம் வரை வருகின்றனர். இவர்கள் போடும் குப்பைகளை அகற்றுவதற்கு எங்களிடம் போதுமான ஊழியர்கள் இல்லை.

பருவதமலை ஏற கட்டணம் -பக்தர்கள் அதிர்ச்சி

இந்து சமய அறநிலையத்துறை எங்களுக்கு எந்த உதவியையும் செய்வதில்லை. இது பற்றி கலெக்டர், எம்.எல்.ஏ கலந்து கொண்ட மகாதீப முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தோம். ஆனால் குப்பைளை அகற்ற வழி ஏதும் கிடைக்கவில்லை. எனவே பக்தர்களிடம் வசூலித்து அந்த பணத்தை கொண்டு ஆட்களுக்கு கூலி வழங்கி சுத்தப்படுத்த உள்ளோம்.

See also  ஆடிப்பூரம்-அம்மன் கைகளில் வளையல் வைத்து பெண்கள் பூஜை

பருவதமலையை சுற்றியுள்ள தென்மகாதேவமங்கலம், கடலாடி, பட்டியந்தல், வீரளூர், சீனந்தல், கெங்கலமகாதேவி, நல்லான்பிள்ளைபெற்றாள், அருணகிரி மங்கலம் மற்றும் கோயில்மாதிமங்கலம் கிராம மக்கள் கட்டண விலக்கு பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காட்ட வேண்டும். அப்படி காட்டுபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதேபோல் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. அதற்கு மேற்பட்டவர்கள் பத்து ரூபாய் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பருவதமலை ஏற கட்டணம் -பக்தர்கள் அதிர்ச்சி

கண்ட இடத்தில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு போதுமான இடங்களில் குப்பை தொட்டிகளை வைத்து அதில்தான் குப்பைகளை கொட்ட வேண்டும் என அறிவுரை வழங்காமல் எல்லோரிடத்திலும் அபராதம் போல் பணம் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம் என்கின்றனர் பக்தர்கள்.

கோயில்களில் பக்தர்களிடமிருந்து கோடி, கோடியாய் வருவாய் சம்பாதிக்கும் இந்து சமய அறநிலையத்துறை குப்பைகளை அகற்ற கூட உதவி செய்யாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!