Homeஆன்மீகம்கோயில் வரவு,செலவு கணக்கு-ஆணையர் அதிரடி உத்தரவு

கோயில் வரவு,செலவு கணக்கு-ஆணையர் அதிரடி உத்தரவு

தணிக்கை அறிக்கைகளை அந்தந்த கோயில் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு இணை மற்றும் உதவி ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.

கோயில் இடம் அபகரிப்பு, குத்தகை குறைவாக வசூல் செய்தல், கோயில் நிலங்கள் நெருக்கமானவர்களுக்கு பெயரளவுக்கு குத்தகை விடுதல் அல்லது விற்பனை செய்தல், ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து சொத்துக்களை மீட்டெடுப்பதில் தாமதம், கோயில் மூலம் கிடைக்க வருமானத்தை முறைகேடாக பயன்படுத்துவது இப்படி பல்வேறு குற்றசாட்டுகள் இந்து சமய அறநிலை துறை மீது இந்து அமைப்புகள் கூறி வருகின்றன.

இதன் காரணமாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.

2022-23 கொள்கை குறிப்பின்படி தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு 4.78 லட்சம் ஏக்கர் நிலம் மற்றும் 22600 கட்டிடங்கள் உள்ளன. இவ்வளவு பெரிய சொத்துக்கள் இருந்த போதிலும் ஜூலை 1.2022 மற்றும் மார்ச் 31,2023 இடையில் வசூலிக்கப்பட்ட மொத்த வாடகை ரூ.117.63 கோடியாக உள்ளது. சொத்து மதிப்பு மற்றும் வருமானம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வு சந்தேகத்துக்கு வழிவகுத்தது.

See also  மகா தீப நெய் காணிக்கை செலுத்தும் வசதி துவக்கம்

இதையடுத்து கோயில் சொத்துக்கள் மற்றும் பதிவேடுகளை தணிகை செய்ய மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் முயற்சித்தார். இதற்கு இந்து சமய அறநிலைத்துறை ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மத நிறுவனங்களின் பதிவுகளை ஆய்வு செய்ய சிஏஜிக்கு அதிகாரம் இல்லை என இந்து சமய அறநிலைத்துறை ஆட்சேபனை தெரிவித்தது.

சென்னை ஐகோர்ட் சிறப்பு பெஞ்ச் ஜூன் 2022-ல் அளித்த தீர்ப்பில் சிஏஜி, எந்த துறையின் கணக்குகளையும் தணிக்கை செய்யலாம், இது போன்ற தணிக்கைகள் மாநிலத்தின் நிர்வாக உரிமைகளை மீறாது என்று தீர்ப்பு அளித்தது.

தமிழக கோயில்களை தணிக்கை செய்ய ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவும் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனாலும் தணிக்கை தொடர்பான விவரங்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் உள்ளது.

திருக்கோயில்கள் தணிக்கை அறிக்கையை இணையதளத்தில் வெளியிட கோரி கடந்த 2023 ஆம் ஆண்டு ஆலய வழிபடுவோர் சங்கத்தைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது சம்மந்தமாக உரிய பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

See also  இந்த வருடமும் யானை இன்றி தீபத்திருவிழா?

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் சார்பில் கூடுதல் ஆணையாளர் (நிர்வாகம்) இரா.சுகுமார், அனைத்து கோயில்களின் இணை ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள், முதுநிலை திருக்கோயில்களின் செயல் அலுவலர்களுக்கு டி.ஆர்.ரமேஷ் ரிட் மனுவை குறிப்பிட்டு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோயில் வரவு,செலவு கணக்கு -ஆணையர் அதிரடி உத்தரவு

இத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சமய நிறுவனங்களின் தணிக்கை அறிக்கைகளை அந்தந்த திருக்கோயிலின் இணைய தளத்தில் PDF (portable Document Format) கோப்புகளாக உள்ளீடு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து திருக்கோயில்களின் செயல் அலுவலர்களுக்கும் பார்வைக்குறிப்பு-2ன் மூலம் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சமய நிறுவனங்களின் தணிக்கை அறிக்கைகளை அந்தந்த திருக்கோயில்களின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவாக ITMS மென்பொருள் மூலம் Audit Information Module Audit Report Upload->Temple ID-ல் உள்நுழைந்து திருக்கோயில் தணிக்கை அறிக்கைகளை பசலி வாரியாக Scan செய்து Pdf வடிவில் 31.01.2025க்குள் பதிவேற்றம் (Upload) செய்திடுமாறு அனைத்து சார்நிலை அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், பட்டியலில் சார்ந்த மற்றும் சாராத சமய நிறுவனங்களின் தணிக்கை அறிக்கைகளை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு தமது சார்நிலை அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கிடுமாறு அனைத்து இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

See also  மகாதீப விசேஷ படங்கள் டாப் வியூவில் தி.மலை நகரம்

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கு தொடர்ந்திருந்த டி.ஆர்.ரமேஷ் கூறியிருப்பதாவது.

இந்து சமய அறநிலையத்துறை கோயில் வருமானத்தில் 4 சதவீதத்தை தணிக்கைக் கட்டணமாக வசூலிக்கிறது. இந்துக் கோயில்களின் வருடாந்திர தணிக்கை அறிக்கைகளை வெளியிடுவதில்லை.

கோயில் வரவு,செலவு கணக்கு -ஆணையர் அதிரடி உத்தரவு
டி.ஆர்.ரமேஷ்

ஆண்டு தணிக்கை அறிக்கைகளை பதிவிறக்கம் செய்யக் கூடிய  PDF வடிவத்தில் துறையின் இணையதளத்தில் வெளியிட 2023 இல் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தேன்.

இந்த வழக்கு, கோயில் விவகாரங்களை விசாரிக்கும் சிறப்பு பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது, நீதிபதிகள், உரிய பதில் தாக்கல் செய்ய ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

31.01.2025 க்கு முன் ஆண்டு வாரியாக தணிக்கை அறிக்கைகளை பதிவேற்றம் செய்யும்படி தனக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஒரு நல்ல முடிவை எடுத்து அதை செயல்படுத்தியதற்காக  பி.என்.ஸ்ரீதர் ஐஏஎஸ்ஸை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!