Homeஅரசியல்அமித்ஷா வந்தாலே ஆட்சி மாற்றம்தான்-நயினார் நாகேந்திரன்

அமித்ஷா வந்தாலே ஆட்சி மாற்றம்தான்-நயினார் நாகேந்திரன்

அரியானா, மகாராஷ்ரா, டெல்லிக்கு அமித்ஷா சென்றார், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதே போல் தமிழகத்திலும் ஏற்படும் என ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் பதில் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏஎஸ் மகாலில் இன்று மாலை நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது,

என் மண், என் மக்கள் யாத்திரையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் நடந்தே வந்து இந்த கட்சியை ஒரு உச்சத்துக்கு எடுத்துச் சென்ற மாபெரும் தலைவர் அண்ணாமலை.(அப்போது விசில் சத்தம் பறந்தது).

நேற்று சென்னையில் ஆரம்பித்து இன்றைக்கு காலையில் செங்கல்பட்டு முடித்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு வரும்போது கொடுக்கப்பட்ட வரவேற்பை பார்த்து கற்பனை உலகத்திற்கு சென்று விட்டேன். 2026 தேர்தல் முடிந்து வெற்றி விழா என்று நினைத்து விட்டேன். இவ்வளவு பெரிய வரவேற்பு இந்த நாடு ஒரு ஆட்சி மாற்றத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது, மிக வேகமாக போய்க் கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. தாமரை, அதன் கீழே இரட்டை இலையும் சேர்ந்து இருக்கும் போது வரவேற்பு எப்படி இருக்கும்?.

அமித்ஷா சென்னைக்கு வந்தார். ஒரு பக்கம் மாநில கட்சி தேர்தல். இன்னொரு பக்கம் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்சை சந்தித்து பேசினார். அவர்கள் என்ன பேசினார்கள், என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இருவரும் இருவரும் ஒன்றாக வந்தார்கள். அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னவுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சிக்கு அது கடைசி மணி அடிப்பது போல் ஒரு எண்ணம் வந்துவிட்டது. மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

See also  சொந்த கட்சி செயலாளர் மீது போலீசில் அதிமுக புகார்

அமித்ஷா வந்தாலே ஆட்சி மாற்றம்தான்-நயினார் நாகேந்திரன்

அமித்ஷா இல்லை, எந்த ஷா வந்தாலும் முடியாது என முதல்வர் சொல்லுகிறார். எந்த ஷா வந்தாலும் அது ஒன்றும் முடியாத காரியம் அல்ல. ஹரியானாவில் அந்த ஷா போனார். வெற்றி பெற்று அங்கு ஆட்சி அமைந்தது, மகாராஷ்டிராவிற்கு அந்த ஷா போனார் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. எதிர்பார்க்கவே முடியவில்லை, ஆம் ஆத்மி ஆட்சி நடந்து கொண்டிருக்கிற டெல்லிக்கு சென்றார்.. அங்கு ஆட்சி மாற்றம் வந்தது. அமித்ஷா இங்கேயே (தமிழகம்) வந்திருக்கிறார். ஆட்சி மாற்றம் வரும். யாருக்கும் எந்தவித சந்தேகமும் வேண்டாம். அவருடைய ராஜதந்திரம் யாருக்கும் புரியாது.

குஜராத்தில் இருந்து இரண்டு பேர் இன்றைக்கு உலகத்தையே கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். மோடி அவர்களும், அமித்ஷா அவர்களும். இவர்கள் இரண்டு பேர் பேரை கேட்டதும் எல்லோரும் ஒரு நடு நடுக்கத்தில் உள்ளனர். மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்று இருக்கிறார். குஜராத்தில் மூன்று முறை முதலமைச்சர். இன்றைக்கு மூன்றாவது முறை பிரதம அமைச்சர். தோல்வியை கண்டறியாதவர். தோல்வி என்ன என்று தெரியாதவர். தோல்வியை எதிரிக்கு கொடுத்து பழக்கப்பட்டவர்.

See also  2 ஆயிரம் பேரை திரட்டி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

இன்றைக்கு இரண்டு பேரின் கவனமும் தமிழகத்தை நோக்கி திரும்பி இருக்கிறது. நான் இதை உங்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. இன்றைக்கு இந்த கூட்டணியில் எத்தனை கட்சிகள் வந்தாலும் எல்லோரும் இலக்கு, நோக்கம், லட்சியம் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதுதான்.

2026 இல் ஆட்சி மாற்றம் வருவது உறுதி. இதை யாராலும் மாற்ற முடியாது. தமிழகத்தில் சொத்து வரி, மின்சார கட்டணம் 300 சதவீதம் கூடியிருக்கிறது. பால் விலை என எல்லாமே விலை ஏறி விட்டது. மாதம் ஆயிரம் கொடுக்கிறோமோ நமக்கு தான் ஓட்டு போடுவார்கள், தேர்தலில் இன்னும் கொடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

அமித்ஷா வந்தாலே ஆட்சி மாற்றம்தான்-நயினார் நாகேந்திரன்

ஆனால் தமிழகத்தில் எத்தனையோ உதவிகளை செய்த கட்சிகள் முடிவில் ஆட்சியை இழந்து போன வரலாறு எல்லாம் இருக்கிறது. இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுகிற எழுச்சி மிகப் பெரிய எழுச்சியாகும். எத்தனை துன்பங்கள், இன்னல்கள் வந்தாலும் தைரியமாக எதையும் எதிர்கொள்ளுங்கள். நான் இருக்கிறேன் உங்களோடு. பாரதிய ஜனதா கட்சி தொண்டனின் காலில் அடிபட்டால் அது என் கண்ணில் பட்ட அடி போன்ற உணர்வோடு உங்களுடன் இருந்து பாதுகாப்பேன். தைரியமாக இருக்கலாம். பழைய காலங்கள் வேறு, இனிவரும் காலங்கள் வேறு. இனிவரும் காலங்கள் பாரதிய ஜனதா கட்சி காலம், தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியின் காலம்.

See also  அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்

இன்னும் ஒரு மாதம் காலம் கழித்து அமித்ஷா தமிழகத்திற்கு மீண்டும் வரப்போகிறார். என்ன மாற்றம் வரப்போகிறது என்பதை நீங்கள் அப்போது தெரிந்து கொள்ளலாம். மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. அதிமுகவுடன் சேர்ந்து அதிகப்படியான பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் நுழைவார்கள். ஆட்சி மாற்றம் வந்து முதலமைச்சராக இபிஎஸ் வருவார்.

பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். பேஸ்புக், டுவிட்டரில் யாராக இருந்தாலும், எதிரியாக இருந்தாலும் அடக்கத்தோடு, நாகரிகமான முறையில் விமர்சனம் செய்ய வேண்டும். போஸ்டர், பேனரில் நரேந்திர மோடி மட்டும்தான் அடைமொழி எல்லாம் போட வேண்டும்.

முதல்வரே, துணை முதல்வரே என்று போடுகிறார்கள். நான் மாநில தலைவர் பதவிக்கு வந்து நாலைந்து நாட்கள்தான் ஆகிறது. என்னுடைய பதவியை நீங்கள் காப்பாற்ற வேண்டும். பாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு கட்டுப்பாடான கட்சி. பாரத் மாதா கி ஜே என்று சொல்லும் போது எல்லோரும் அமைதியாக, கட்டுப்பாடாக இருக்கிற கட்சி.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன், மாநில பொதுச் செயலாளர் பி.கார்த்தியாயினி, மாநில செயலாளர் கொ.வெங்கடேசன் உள்பட பலர் பேசினார்கள்.

முன்னதாக திருவண்ணாமலைக்கு வந்த நயினார் நாகேந்திரனுக்கு மாவட்ட எல்லையிலும், நகர எல்லையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!