Homeஆன்மீகம்ஆடி பவுர்ணமி: தேசிய கொடியுடன் கிரிவலம் வந்த பக்தர்கள்

ஆடி பவுர்ணமி: தேசிய கொடியுடன் கிரிவலம் வந்த பக்தர்கள்

ஆடி பவுர்ணமி: தேசிய கொடியுடன் கிரிவலம் வந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமியை யொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

தேசிய கொடியுடன் ஆந்திர பக்தர்கள் சிலர் கிரிவலம் வந்து தேசப்பற்றை வெளிப்படுத்தினர். 

திருவண்ணாமலையில் மலையை வலம் வருதல் அண்ணாமலையை வலம் செய் என்று சொல்லிய அளவிலே பிரமஹத்தி(கொடுமையான பாவங்கள்) நீங்கிப் போகும். பகையை நீக்க விரும்புவோரும், நல்ல பிள்ளைகளைப் பெற விரும்புவோரும், வினைகளை நீக்க விரும்புவோரும், கல்வியைப் பெற விரும்புவோரும், அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டு மலையை வலம் வருகின்றனர். இதே போல் ஒவ்வொரு கிழமைகளிலும் மலையை வரும் வருவதற்கு பலன்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக சிவராத்திரி, வருடப்பிறப்பு, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதப் பிறப்பு ஆகிய தினங்களில் வலம் வந்தால் அதிக பலன்கள் தரும் என சொல்லப்பட்டிருக்கிறது. மலையே இறைவனாக இருப்பதால் மலையை வலம் போது மலையை சுற்றி இருக்கும் ஆற்றல்களை பெற முடியும் என்பதாலும், மலையை சுற்றி வாழும் சித்தர்களின் ஆற்றல்களும் கிடைக்கப் பெறும் என்பதாலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர். சிலர் அங்கபிரதட்சணமாகவும் கிரிவலம் வருகின்றனர்.

See also  2668 அடி உயர மலை உச்சிக்கு சென்ற கொப்பரை

ஆடி மாத பவுர்ணமி இன்று காலை 10.16 மணிக்கு தொடங்கி நாளை காலை 8 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி இன்று திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையார்- உண்ணாமலையம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

ஆடி பவுர்ணமி: தேசிய கொடியுடன் கிரிவலம் வந்த பக்தர்கள்

ஆடிமாத பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கில் பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள மலையை வலம் வந்தனர். ஆந்திரா பகுதியில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சிலர், தேசிய கொடிகளை கையில் ஏந்தி கிரிவலம் வந்தனர். 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அவர்கள் தேசிய கொடியுடன் வந்திருந்தனர்.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜெனி என்ற பெண், கையில் எல்.இ.டி பல்ப்பை வைத்துக் கொண்டு கிரிவலப் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என பக்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு மட்டுமன்றி குறைந்த விலைக்கும் பல்புகளை விற்பனை செய்தார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!